சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாடா திருமாவளவனுக்கு ரூட் கிளியர் ஆயிருச்சு... திமுக இனி சிறுத்தைகளை கைவிடாது!

பாமக-அதிமுக கூட்டணி.. நிம்மதி அடைந்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் பாமக இணைந்துவிட்டதால், இரு கட்சிகளில் யாருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ, திருமாவளவனுக்கு பெருத்த லாபம்தான்! பரபரப்பிலேயே இதுநாள் வரை திமுக கூட்டணியில் நீடித்து வருபவருக்கு இப்போதுதான் ரூட் கிளியர் ஆகிஉள்ளது!!

பாமகவை கூட்டணியில் சேர்க்க துரைமுருகன், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் போன்றோர் முயற்சி செய்தனர்.

ஆனால் இதற்கு திமுகவில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று துணிந்து சொன்னார்.

வெளியேறும்

வெளியேறும்

அப்படி சொல்லிவிட்டாரே என்று திருமாவளவனுக்கு உள்ளுக்குள் கலக்கம் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. ஏனெனில் கூட்டணி வைக்க திருமாவளவனோ, அல்லது விசிகவை சேர்த்து கொள்ள அதிமுகவோ உடனடி தயார் மனநிலையில் இல்லை என்றே கருதப்பட்டது.

தயாரான திமுக

தயாரான திமுக

ஒருவேளை பாமக திமுகவில் இணைந்திருந்தால், கண்டிப்பாக திருமாவளவனும் வெளியே வந்திருப்பார். இவ்வளவு வருஷமாக கூடவே இருக்கும் கட்சி என்று கூட பார்க்காமல் விசிகவை கழட்டி விடவும் திமுக தயாராக இருந்திருக்கும்.

தேசம் காப்போம்

தேசம் காப்போம்

அதேபோல போன முறையாவது ஐவர் கூட்டணி என்று ஒன்று இருந்தது. இந்த முறை அதுவும் இல்லை. பாஜகவை அளவுக்கு அதிகமாக விமர்சித்துவிட்டதால் அதிமுகவிலும் போக முடியாது. திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் "தேசம் காப்போம்" மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டாலும் திருமாவளவனுக்கு உள்ளுக்குள் குழப்ப நிலையே நீடித்தது.

ரூட் கிளியர்

ரூட் கிளியர்

ஆனால் இப்போது அதிமுகவுடன் பாமக இணைந்துவிட்டதால் திருமாவளவனுக்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. பல நாள் பிரச்சனை, குழப்பம், பதட்டம், பீதியிலேயே இருந்த திருமாவளவன் இன்றைக்குதான் நிம்மதி ஆகி இருக்கிறார்.

English summary
Thirumavalan has been relieved by the AIADMK-DMK coalition today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X