சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோரையும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு எப்படி பேரம் பேச முடியும்... உருக்கமாக பேசிய திருமாவளவன்!

Google Oneindia Tamil News

சென்னை: வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிய பிறகு எனக்கு பேரம் பேச தெரியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

நாங்கள் 6 தொகுதிகளை வாங்கவில்லை. 6 எம்.எல்.ஏக்களை வாங்கியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யுனிஸ்டுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக் 2 தொகுதிகள் ஒதுக்கி விட்டது. ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கியது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் கொடுங்கள்; குறைந்தது 8 தொகுதியாவது கொடுங்கள் என்று கூறியது. ஆனால் இதை ஏற்க மறுத்த திமுக 6 தொகுதியையே கொடுத்தது.

Thirumavalavan has said he did not know how to negotiate after slandering everyone

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அந்த கட்சியின் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் குறைந்த தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது:- 5 ஆண்டாக திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வந்தோம். எனக்கு பேரம் பேசும் வலிமை இல்லை. அதிமுக, பாஜகவுடன் பேரம் பேச முடியும் என எண்ணி இருந்தால் இதைக் காட்டி பேரம் பேசி இருக்க முடியும்.

எடுத்த எடுப்பிலேயே திமுகவுக்கு அதிமுக 20 இடங்களை விட்டுக்கொடுத்திருச்சு.. திருமாவளவன்எடுத்த எடுப்பிலேயே திமுகவுக்கு அதிமுக 20 இடங்களை விட்டுக்கொடுத்திருச்சு.. திருமாவளவன்

வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிய பிறகு எனக்கு பேரம் பேச தெரியாது. நாங்கள் 6 தொகுதிகளை வாங்கவில்லை. 6 எம்.எல்.ஏக்களை வாங்கியுள்ளோம். சம்பந்தமில்லாமல் எனக்கு கோபம் வராது. நான் கோபப்பட்டால் அதில் நியாயம் இருக்கும் என்று திருமாவளவன் பேசினார்.

English summary
viduthalai siruthai katchi leader Thirumavalavan said he did not know how to negotiate after slandering everyone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X