சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாம்பை கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகிவிடுமா.. பாஜக விஷம்.. சீறிய திருமாவளவன்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாம்பை கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி ஆகிவிடுமா ? - திருமாவளவன்- வீடியோ

    சென்னை: பாம்பை கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகிவிடுமா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ரஜினி எப்போதும் பேசினாலும் அது விவாத பொருளாகிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ரஜினியிடம் 7 தமிழர்கள் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு ரஜினியோ எந்த 7 பேர், எனக்கு எதுவும் தெரியாது என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பலசாலி

    பலசாலி

    அதை விட ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்பதை நீங்கள் சொல்லுங்கள் என செய்தியாளர்களிடம் கேட்டு சூசகமாக எதிர்க்கட்சிகள் மோடியை எதிர்ப்பதால் அவர் பலசாலி என்றார் ரஜினி.

     நிரூபணம்

    நிரூபணம்

    இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என சொன்னதிலிருந்தே இது பாஜகவின் அசைன்மென்ட் என பெரும்பாலானோர் விமர்சித்த நிலையில் ரஜினி பச்சையாக தான் பாஜக ஆதரவாளர் என்பதை இதன் மூலம் நிரூபித்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதினர்.

    பலசாலியல்ல

    பலசாலியல்ல

    இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும். அந்த அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும் விஷம் கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம் என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

    ஆட்டு மந்தைகள்

    ஆட்டு மந்தைகள்

    திருமாவளவனின் இந்த பதிலுக்கு தமிழிசை உரிய பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஆட்டுமந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    [ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா ?-தமிழிசை]

    English summary
    VCK chief Thirumavalavan says that a crew of soldiers always gets panic on seeing snake not meant to snake id stronger.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X