• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

SC-ன்னாலே இப்படியா.. திரியில் நெருப்பு எங்கே.. ஆர்எஸ்எஸின் டிரையல்.. வெளுத்து வாங்கும் திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் இங்கு ஆபத்து என்று திருமாவளவன் அடித்து கூறுகிறார்.. அத்துடன், தமிழகத்தின் குண்டுவெடிப்பு வீசிசில் இவர்களுக்கு முக்கிய தொடர்பு உள்ளதாகவும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.

திருமாவின் இந்த குற்றச்சாட்டு, பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது

ஆதாரம்

ஆதாரம்

அவரிடம், தமிழகத்தில் தற்போது நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், பாஜக பின்னணியில் உள்ளதாக சொன்னீர்களே, எந்த ஆதாரங்களின் அடிப்படையில், அந்த குற்றச்சாட்டை சொல்கிறீர்கள் என்று நம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு திருமாவளவன் விரிவான பதில் ஒன்றை நமக்கு தந்துள்ளார்.. நிறைய மீடியாவில் அந்த தகவல்கள் பதிவாகி உள்ளன.. ஒருவர் தன்னை தானே கையை வெட்டிக் கொண்டு, இஸ்லாமியர்தான் வெட்டிவிட்டார் என்ற புகார் தருகிறார்.. கடைசியில் விசாரணையில் அவரே கையை வெட்டிக் கொண்டதாக உறுதிப்படுத்தப்படுகிறது.. அது செய்தியாகவே வந்துள்ளது.

 திரி + பெட்ரோல்

திரி + பெட்ரோல்

ஒருமுறை 2 இடங்களில், திருப்பூர் + சென்னையில் கார் கொளுத்தப்பட்ட சம்பவம் நடந்தது.. இந்த விசாரணையிலும், தங்கள் காருக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டனர் என்று செய்திகள் வந்துள்ளது.. தென்மாவட்டத்திலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.. விசாரணையில், அவரே அவர் வீட்டுக்கு குண்டு வீசியுள்ளார்.. தமிழகத்தில் இதற்கு முன்பெல்லாம் எஸ்.சிக்கு எதிரான வன்முறைகள்தான் நடக்கும்.. அதாவது, அம்பேத்கர் சிலையை அவமதிப்பது, அம்பேத்கர் சிசிலைக்கு செருப்பு மாலை போடுவார்கள், திடீரென தலித்களின் குடிசைகளை கொளுத்துவார்கள்.. இந்த வன்முறைகள் வழக்கமாக இங்கு நடக்கும்..

 செருப்பு மாலை

செருப்பு மாலை

ஆனால், முதல்முறையாக, பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடுவது, அண்ணா சிலைக்கு செருப்பு மாலை போடுவது, திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசுவது இதெல்லாம் சங் பரிவார்களின் நடவடிக்கைகள்தான்.. இப்போதுகூட ஒரு இடத்தில், ஆ.ராசாவின் தலையை காவித்துணியால் மூடி, செருப்பு மாலை போட்டு, அவர் கையில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வைத்துவிட்டு போயுள்ளனர்.. இதெல்லாம் நமக்கு பட்டவர்த்தனமான சங் பரிவார்களின் நடவடிக்கைகள் என்பது தெளிவாகிறது.

 18+ வயது

18+ வயது

அதேபோல, ஆர்எஸ்எஸ் சங்பரிவார்களின் கடந்த கால வரலாறு நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால், அவர் பெயர் யஷ்வந்த் சிண்டே.. 18 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டவர்.. இவர் இப்போது, கோர்ட்டில் அபிடவிட் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.. மும்பை மாவட்ட செசஷ்ன்ஸ் கோர்ட்டில் இதை தாக்கல் செய்துள்ளார்.. அதில், நான் 18 வயதில் ஆர்எஸ்ஸில் சேர்ந்தேன்.. இவர்கள் சண்டை குணமுள்ள இளைஞர்களை தேடி தேடி எடுக்கிறார்கள்.. அந்த இளைஞர்களை ஜம்மு, காஷ்மீர் பகுதிகளுக்கு கொண்டு சென்று பயிற்சி தருகிறார்கள்..

 ஹிந்து அல்லாதவர்

ஹிந்து அல்லாதவர்

அதில் வெடிகுண்டு செய்வது எப்படி, பெட்ரோல் குண்டு செய்வது எப்படி, அதை வெடிக்க வைப்பது எப்படி என்று கற்று தருகிறார்கள்.. ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், வன்முறைகளை தூண்டி, இந்து + இந்து அல்லாதவர் என்ற பிரிவினையை தூண்டுகிறார்கள். இதற்கு நானே ஒரு சாட்சி என்று கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இந்த வரலாறு எல்லாம் நமக்கு என்ன பாடத்தை தருகிறது? இன்றைக்கு திடீர் திடீர் என்று தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது.. பாட்டிலுக்குள் பெட்ரோலை நிரப்பி, அதில் உள்ள திரியை கொளுத்தி அதை குடிசைக்குள்ளோ, வைக்கோல் மீதோ வீசி எறிவார்கள்.. இது ஒரு அச்சுறுத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது..

 நெருப்பு + திரி

நெருப்பு + திரி

ஆனால், ஏழெட்டு இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்கிறார்கள்.. ஒரு இடத்தில்கூட திரியில் நெருப்பு இல்லை.. பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.. ஒருத்தருக்கும் காயமில்லை.. பொருட்சேதமும் ஏற்படவில்லை.. ஆக, இதில் டிரெயினிங் எடுத்து, ஒரு டிரையல் மாதிரி இதில் பார்க்கிறார்கள்.. நிச்சயமாக, இதில் ஆர்எஸ்எஸ்ஸின் கை உள்ளது என்பதை வலுவாக நம்புகிறேன்.. கடந்த கால சான்றுகளில் இருந்து சொல்கிறேன்.. இது என்னுடைய யூகம் இல்லை.

விதைக்கிறார்கள்

விதைக்கிறார்கள்

பொதுவாக எதையுமே யூகமாக சொல்ல முடியாது.. அப்படி சொல்கிற நபர் நானும் கிடையாது.. தொடர்ச்சியாக கண்காணித்துகொண்டு வருவதில், அவங்களுக்காக ஒரு வரலாறு உள்ளது.. வடமாநிலங்களில் அவர்கள் எப்படி செயல்பட்டு வருகிறார்கள்.. இஸ்லாமிய வெறுப்புகளை எப்படி விதைக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னுடைய 32 ஆண்டுகால பொதுவாழ்க்கை அரசியலில் நான் நிறைய படிச்சிருக்கேன்.. பார்த்திருக்கேன்.. கேட்டிருக்கேன்.. ஆனால், இது முன்முடிவு அல்ல.

முஸ்லிம்கள்

முஸ்லிம்கள்

இது தொடர்பாக சேலத்தில் 6 பேரை பிடித்துள்ளனர்.. இவர்கள் இஸ்லாமியர்கள்.. இதில் 2 பேர் மீது மட்டும் சந்தேகமாக உள்ளதாக போலீசார் சொல்லி உள்ளனர்.. விசாரித்துவிட்டு விட்டுவிடுகிறோம் என்கிறார்கள்.. ஆனால் ரிமாண்ட் செய்துவிடுகிறார்கள்.. இப்போது வெளி உலகத்துக்கு என்ன தோன்றும்? முஸ்லிம்கள்தான் வெடிகுண்டு வீசினார்கள் என்று நினைப்பார்கள்தானே? இது தொடர்பான போராட்டத்தை தான் உடனடியாக எடுக்கிறோம்..

 SC யார்?

SC யார்?

சமுதாயத்தில் எஸ்ஸி என்றாலே ஒரு முடிவுக்கு வரக்கூடாது.. அவர்கள் சுகாதாரத்துடன் இருக்க மாட்டார்கள், அறிவுப்பூர்வமாக யோசிக்க மாட்டார்கள், வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதெல்லாம் காலம் காலமாக திணிக்கப்பட்ட முன்முடிவுகள்.. ஆனால், நான் சொல்வது முன்முடிவு அல்ல.. நாளேடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், இவைகளில் எல்லாவற்றிலுமே நான் சொல்லும் தகவல்கள் வந்துள்ளன.. அந்தவகையில், நான் படித்ததை, பார்த்ததைதான் சொல்கிறேன்" என்றார்.

English summary
Thirumavalavan slams BJP, RSS and says about Petrol Bomb incident in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X