சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவலிங்கம் முன்பு முட்டி போட்டு.. லிங்கத்தை தொட்டு பார்த்த திருமாவளவன்.. நூதன பிரச்சாரம்!

மனுஸ்மிருதிக்கு எதிராக திருமாவளவன் பிரச்சாரத்தை துவங்கினார்

Google Oneindia Tamil News

சென்னை: கோயிலுக்குள் சிவலிங்கத்தின் பின்பக்கம் முட்டிப்போட்டு அமர்ந்து, லிங்கத்தை தொட்டு பார்த்து போட்டோவும் எடுத்துகொண்டார் விசிக தலைவர் திருமாவளவன்.. பிறகு மனுஸ்மிருதிக்கு எதிரான பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார்.

மனுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவான விதிகள் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் ஆன்லைன் கருத்தரங்கில் ஒன்றில் கடந்த மாதம் பேசியிருந்தார்.

Thirumavalavan started the Campaign against Manusmiriti

மனு ஸ்மிருதியில் இருப்பதை குறிப்பிட்டு திருமா பேசியதை, அவரது சொந்த கருத்துக்கள் என்று திரித்து பேசப்பட்டன.. குறிப்பாக, பாஜகவினரும், சங் பரிவார அமைப்புகளும் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திருமா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் போராட்டம் செய்தனர்.. இந்து பெண்கள் பலர், தனிப்பட்ட முறையில் திருமாவளவனை திட்டி, வீடியோவும் வெளியிட்டு வருகின்றனர். அதேசமயம், சைவ தமிழ் பேரவையின் நிர்வாகி கலையரசி நடராஜன் திருமாவளவுனுக்கு துன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார்.

இதனிடையே மனுஸ்மிருதியில் பெண்களை குறித்து இழிவாக இருக்கும் விதிகளை பற்றி பொதுமக்களிடமும், பெண்களிடமும் எடுத்து சொல்ல புறப்பட்டுள்ளார் திருமாவளவன்.. முன்னதாக, விசிக நிர்வாகிகளுடன் ஆவடியில் உள்ள கலையரசி நடராஜன் நடத்தும் சிவன் கோயிலுக்கு சென்றார். அந்த கோயில் மிக சிறியது..

காட்டுப் பகுதியில்.. லுங்கியை தூக்கி கட்டி.. சிம்புவின் பரபர வீடியோ.. வெடித்தது சர்ச்சை! காட்டுப் பகுதியில்.. லுங்கியை தூக்கி கட்டி.. சிம்புவின் பரபர வீடியோ.. வெடித்தது சர்ச்சை!

சிவலிங்கத்தின் பின்பக்கம் முட்டிப்போட்டு அமர்ந்து, லிங்கத்தை தொட்டு பார்த்தார் திருமாவளவன். பிறகு சிவலிங்கத்துடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துகொண்டார்.. அதற்கு பிறகு அங்கிருந்த மகளிரணியினரிடம் துண்டு பிரச்சாரத்தை தந்து, மனுஸ்மிருதிக்கு எதிரான பிரச்சாரத்தையும் திருமா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியபோது, "நான் சொல்லும் கருத்துக்கு பின்னணியில் திமுக இருப்பதாக சனாதன சக்திகள் பரப்பி வருகின்றன.. ஆனால் தன்னுடைய கருத்துக்கு தான் மட்டுமே பொறுப்பு.. கூட்டணியில் இருப்பதாலேயே திமுக இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவது மோசடித்தனமான அரசியல்" என்றார்.

English summary
VCK Leader Thirumavalavan started the Campaign against Manusmiriti
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X