India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ட்விஸ்ட்.. திருமாவளவன் கண்ணாடி முன்னாடி நின்று.. ஸ்டாலினுக்கும் செக்.. ரவுண்டு கட்டும் பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றைய தினம், முதல்வர் ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் ஒரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தி, செக் வைத்துள்ளார் பாஜகவின் அண்ணாமலை.. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது... இந்த நிலையில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தெற்கை நோக்கி ஓபிஎஸ்.. 7 இடங்களில் 'இறங்கி’ பவரை காட்ட.. ஆரம்பம்தான்.. பெரியகுளம் குலுங்கப்போகுதாம்! தெற்கை நோக்கி ஓபிஎஸ்.. 7 இடங்களில் 'இறங்கி’ பவரை காட்ட.. ஆரம்பம்தான்.. பெரியகுளம் குலுங்கப்போகுதாம்!

இதையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன... ஜனாதிபதி தேர்தலில் மாநில கட்சிகளின் பங்கு அதிக அளவில் தேவை என்பதால், மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் ஆரம்பமாகி உள்ளன.

 திருமாவளவன் வேண்டுகோள்

திருமாவளவன் வேண்டுகோள்

இப்படிப்பட்ட சூழலில், கடந்த ஒரு மாதமாகவே, திருமாவளவன் முக்கிய வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்து வருகிறார்.. அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதற்கு திருமா சொல்லும் காரணம், "இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த யாருமே ஜனாதிபதியாக இருந்ததில்லை.

 இஸ்லாமிய மக்கள்

இஸ்லாமிய மக்கள்

இந்திய மக்கள் தொகையில் 3வது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறிஸ்தவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதி நிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அவர்களது மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.. இதற்கு முன்பு, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளனர்.

 கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள்

ஆனால் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.. இந்த பாஜகவின் 8 வருட ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றிக் கிறிஸ்தவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்பட்டு எவ்வித ஆதாரமும் இன்றி கிறிஸ்தவர்கள் பழி வாங்கப்படுகின்றனர். மேலும் சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களால் கிறிஸ்தவர்கள், குறிப்பாக பாதிரியார்கள் திட்டமிட்ட தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த நேரத்தில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும்..

 கிறிஸ்தவ சமுதாயம்

கிறிஸ்தவ சமுதாயம்

இது பாதுகாப்பற்ற நிலையில் எந்நேரமும் அச்சத்தில் உழலும் கிறிஸ்தவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும் அமையும் என்பதே திருமாவளவனின் வாதம்... அதுமட்டுமல்ல, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கிறிஸ்தவர் ஒருவரை களம் இறக்க வேண்டும், இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவிப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்து வருகிறார்.. திருமாவளவனின் இந்த கோரிக்கைக்கு, முதல்வர் தரப்பில் இன்னும் பதில் எதுவும் வரவில்லை. ஆனால், அதற்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வேறு ஒரு விஷயத்தை கூறி, திருமாவளவனுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் செக் வைத்துள்ளார்..

 ஸ்டாலினுக்கு காய்ச்சல்

ஸ்டாலினுக்கு காய்ச்சல்

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 8 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அதன் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஜனாதிபதி தேர்தல் வர போகிறது.. பாஜக சார்பாக திரெளபதி முர்மு அதிக வாக்கு சதவீதம் பெற்று வெல்வார்.. எப்பொழுது திரெளபதி முர்மு பெயரை அறிவித்தோமோ, அன்னைக்கே, அப்போதே முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.. சமூக நீதியை உண்மையாக கடைபிடிப்பவராக ஸ்டாலின் இருந்தால், பாஜக ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை அவர் ஆதரிக்க வேண்டும்.

 கிறிஸ்தவர்

கிறிஸ்தவர்

யார் அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்களை முதன்மைப்படுத்துவதற்காத்தான் இந்த பாஜக இருக்கிறது.. இங்கே இருக்கக்கூடிய சில தலைவர்களை கேட்கிறேன்.. நீங்க என்ன பேசுறீங்கன்னு யோசித்து பேசுங்கள்.. அண்ணன் திருமாவளவன், கண்ணாடி முன்பு நின்று தன்னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. ஜனாதிபதி வேட்பாளராக, ஒரு கிறிஸ்தவரை முன்னிறுத்த வேண்டும், அதுதான் சரியாக இருக்கும் என்று திருமாவளவன் சொல்கிறார்.. ஆனால் அன்றைக்கு ஒரு கிறிஸ்தவராக சங்மாவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியபோது ஏன் வாக்களிக்கவில்லை.. எதற்காக பிரணாப் முகர்ஜிக்கு திருமாவளவன் வாக்களித்தார்?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

 நாராயணன்

நாராயணன்

இதே கருத்தைதான் சில தினங்களுக்கு முன்பு, பாஜகவின் நாராயணன் திருப்பதியும் கேட்டிருந்தார்.. "ஜனாதிபதியாக ஒரு கிறித்தவரை எதிர்க்கட்சிகள் போட்டியிட வைக்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள இவ்வளவு பெரிய சமூகம் இப்படி புறக்கணிப்படுவது ஜனநாயகத்துக்கு பெருமை சேர்ப்பதாகாது" என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்தபோது, நாராயணன் ஒரு ட்வீட் போட்டிருந்தார்..

  அக்னிபாத்தை யாரு அதிகமா எதிர்க்கிறாங்க பாருங்க! - திருமாவளவன் லாஜிக்
   திருமாவளவன்

  திருமாவளவன்

  பாஜகவின் இந்த கேள்விக்கு விசிக இதுவரை பதில் தராமல் இருந்து வரும் நிலையில், விசிக விடுத்துள்ள கோரிக்கைக்கு திமுக தரப்பில் இருந்தும் இதுவரை சாதகமான பதில் வரவில்லை.. அதேசமயம், திருமாவுக்கு ஆதரவான கருத்துக்களும் அரசியல் களத்தில் எழுந்து வருகின்றன.. அன்றைய சூழல் எப்படி இருந்தது என்று தெரியாமல், சங்மாவை விட்டு, பிரணாப்புக்கு வாக்களிக்க வேண்டிய தேவை என்ன இருந்தது என்று தெரியாமல், இப்படி பொத்தாம் பொதுவாக பாஜக பேசக்கூடாது என்பது போன்ற விவாதங்கள் சூடுபறக்கின்றன...!

  English summary
  thirumavalvan asks, christian should be nominated as the common candidate of the opposition for presidential election and annamalai replies திருமாவளவனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X