சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்து.. திருமுருகன்காந்தி வார்னிங்

Google Oneindia Tamil News

Recommended Video

    கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்து - திருமுருகன்காந்தி

    சென்னை: கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்து என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தெரிவித்துள்ளார்.

    இலங்கை தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராகியுள்ளார். பிரதமராக கோத்தபயவின் அண்ணனும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.

    இருவரும் இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்கள். தஞ்சாவூர் தமிழக ஜனநாயகக் கட்சி சார்பில் திப்பு சுல்தானும் இந்திய சுதந்திரப் போராட்டமும் என்னும் தலைப்பில் தமிழக ஜனநாயக கட்சியின் தலைவர் ஜாபர் செரீப் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கலந்து கொண்டார்.

    ராஜபக்சே

    ராஜபக்சே

    இந்நிகழ்வில் பங்கேற்ற மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராகி இருப்பது தெற்காசிய பிராந்தியத்திற்கே பேராபத்து.

    அதிகாரம்

    அதிகாரம்

    தமிழர்களை கொன்றுக் குவித்த ராஜபக்சே பிரதமராகியிருப்பது இலங்கை தமிழர் மட்டுமின்றி தமிழக தமிழர்களுக்கும் பேராபத்து. இந்திய அரசு சர்வதேச போர் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் எப்படி அதிகாரத்திற்கு வந்தார்கள்.

    தமிழர்கள்

    தமிழர்கள்

    இந்திய அரசு உதவியின்றி வந்திருக்க முடியாது. இலங்கையில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பது தமிழக மீனவர்களுக்கு பேராபத்து. கடந்தகால ஆட்சியில் படகுகள் பறிமுதல், மீனவர்கள் வலை அறுப்பு என்று தொடரும். இந்திய அரசின் வெளியுறவுத்துறை எப்படி தமிழர்களை பாதுகாக்கும்?

    ராணுவம்

    ராணுவம்

    சர்வதேச உதவிகள் இல்லாமல் குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வர வாய்ப்பில்லை. தமிழர்கள் இதை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். கோத்தபய ராஜபக்சே ராணுவத்தில் இருந்தபோது 40 ஆயிரம் தமிழர்கள், 40 செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

    எதிர்க்க வேண்டும்

    எதிர்க்க வேண்டும்

    இந்திய அரசின் ஆதரவின்றி கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்திருக்க முடியாது. எனவே இந்திய பெருங்கடல் தமிழர்களும், தமிழ் கடல் தமிழர்களும் இதை எதிர்க்க வேண்டும் என்றார் திருமுருகன்காந்தி.

    English summary
    May 17 movement Chief Thirumurugan Gandhi says that when Gotabaya Rajapaksa become Srilankan President there is a disaster for South Asian countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X