சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்?.. பரபரக்கும் கேள்விகள்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலுக்கான நாட்கள் நெருங்க நெருங்க அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் கட்சிகள் கூட்டணியை கட்டமைப்பதில் அதி தீவிரமாக உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை இரு தேசிய கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பதுவும் எத்தனை தொகுதிகள் என்பதுவும் முடிவாகிவிட்டது. இந்த நிலையில் பாமக யாருடன் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துவந்த நிலையில் அவர்கள் அதிமுக அணி என்று முடிவானதுடன் 7+1 என்று தொகுதிகளையும் பெற்று பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

Thirunavukarasar met Vijayakanth- a few questions

அதே வேளையில் விஜயகாந்தின் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப் பட்டு வருகிறது. அவர்கள் அதிமுக அணியில்தான் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அங்கு சேர்ந்தால் 3 அல்லது 4 தொகுதிகள்தான் கிடைக்கும் என்ற சூழலே நிலவி வருகிறது.

ஆனால் பாமகவை விட குறைந்தது ஒரு தொகுதியாவது அதிகமாக தந்தால்தான் நாங்கள் கூட்டணிக்கு வருவோம் என்று தேமுதிக பிடிவாதமாக உள்ளது. இதனால் பாஜகவின் உதவியை நாடிய அதிமுக மத்திய அமைச்சர் பியுஸ் கோயலை வைத்து பேச வைத்தது. இருந்தாலும் விஜயகாந்த் தரப்பினர் படியவில்லை.

Thirunavukarasar met Vijayakanth- a few questions

இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சென்று சந்தித்துள்ளார். அதோடு அரசியல்தான் பேசினோம் என்றும் கூறியுள்ளார். இவர்களது சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

· திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்தது எந்த அடிப்படையில் சந்தித்தார்?

· திமுக காங்கிரஸ் அணிக்கு தேமு தி.க வை அழைப்பது என்றால் அதை திருநாவுக்கரசர் முடிவு செய்ய முடியுமா?

· திருநாவுக்கரசர் முடிவு செய்ய முடியாது என்றால் மாநிலத் தலைமை சொல்லித்தான் அவர் விஜயகாந்தை சென்று சந்தித்தாரா?

· காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டணியில் எந்தக் கட்சியை சேர்ப்பது என்பதை திமுக தான் முடிவு செய்யும் என்று கூறிவிட்ட சூழலில் கே.எஸ்.அழகிரி அப்படி கூறியிருக்க வாய்ப்பில்லை

· அப்படியென்றால் திமுகவில் இருந்து அப்படி ஒரு மூவ் இருந்திருக்குமா என்றால் அதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நேற்று தொகுதி பங்கீடு குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசியபோது அவரிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது அப்போது ஸ்டாலின் இந்த கேள்வியையே விரும்பாதவராக அப்படி எதுவும் இல்லை என்றே பதில் கூறினார்

· அப்படியென்றால் காங்கிரஸ் தலைமை கூறி திருநாவுக்கரசர் சென்று பார்த்தாரா ?

· ஒரு வேளை திருநாவுக்கரசரின் அழைப்பை ஏற்று விஜயகாந்த் வரும் பட்சத்தில் எத்தனை தொகுதிகள் அவருக்கு ஒதுக்கப்படும் ?

· காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்ட சூழலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படும் பட்சத்தில் திமுக எத்தனை இடங்களில் போட்டியிடும்?

· அதிமுக கிட்டத்தட்ட 22 இடங்கள் அல்லது அதற்கு மேலாக கூட போட்டியிடும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில் திமுக அதற்கு குறைந்த இடங்களில் போட்டியிடுமா

· அப்படியே தேமுதிக திமுக கூட்டணிக்கு வரும்பட்சத்தில் திமுக ஒதுக்கும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் போட்டியிட ஒத்துக் கொள்வார்களா

Thirunavukarasar met Vijayakanth- a few questions

இப்படியாக பல்வேறு கேள்விகள் எழுகிறது. ஆனால் இந்த கேள்விகளுக்கு உடனடியாக விடை கிடைக்குமா என்றால் அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு சதவீதமான 2.5% ன் அடிப்படையில் அவர்களுக்கு தேமுதிக கேட்பது போல 7 தொகுதிகளை அள்ளிக் கொடுக்க எந்த அணியும் முன்வராது.

இந்த நிலையில் இன்று காலை திருநாவுக்கரசர் விஜயகாந்தை சென்று சந்தித்து அழைப்பு விடுத்தது நிச்சயமாக திமுக அணிக்கு இல்லை என்பது தெளிவு. அப்படியென்றால் யாருக்காக அவர் அழைத்தார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சற்று பின்னோக்கி பார்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

திருநாவுக்கரசருக்கு ஏற்கனவே காங்கிரஸ் தலைமையில் தினகரன், கமல்ஹாசன் போன்றோரை ஒன்றிணைத்து ஒரு அணி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதை சரியான நேரத்தில் மோப்பம் பிடித்த திமுக ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து தங்கள் கூட்டணியில் இணைத்துக்கொண்டது. அதன் பின்னரே திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார் என்பதெல்லாம் தெரிந்த கதை. அதன் பின்னரும் திருநாவுக்கரசரின் மூவ் இப்படி இருக்கலாமோ என்ற சந்தேகம் இந்த நேரத்தில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

English summary
In what capacity Thirunavukkarasar met DMDK president Vijayakanth?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X