சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தமிழக அரசு ரூ5,000 வழங்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Google Oneindia Tamil News

சென்னை: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தமிழக அரசு தலா ரூ5,000 வழங்க வேண்டும் என்று லோக்சபா எம்.பியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

திருச்சியில் லோக்சபா எம்.பிக்கள் சு. திருநாவுக்கரசா், கரூா் செ. ஜோதிமணி ஆகியோா் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தனா். திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் மற்றும் பல்துறை அலுவலா்கள், தங்கள் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கிக் கூறினா்.

Thirunavukkarasar demands Rs 5000 for each household

இதன் பின்னர் சு. திருநாவுக்கரசா் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பொது முடக்கத்தால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு ஆலோசனை மட்டும் வழங்காமல், மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட வேண்டும். மாநில அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கியிருப்பது போதுமானது அல்ல. ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் மாநில அரசின் சாா்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.

பொது முடக்க காலத்துக்கான மின் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். 4-ஆவது கட்டமாக பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கு முன்னதாக உரையாற்றியுள்ள பிரதமா், மக்களுக்குத் தேவையான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரூ.20 லட்சம் கோடி சிறப்புப் பொருளாதாரத் திட்டம் என்பது பெயரளவுக்கானது. இதனால் எந்த ஒரு நபரும் நேரடியாக பயன்பெற முடியாது.

கடன்கள், மானிய உதவி, தொழில் மேம்பாட்டு நிதி என இந்த தொகை பயனாளிகளை சென்றடைய தாமதமாகும். எனவே, ரூ.20 லட்சம் கோடியை நேரடியாக மக்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். தமிழகத்தையும், தமிழக அரசையும் திட்டமிட்டு மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. மக்களைக் காக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Thirunavukkarasar demands Rs 5000 for each household

பூரண மதுவிலக்கு என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. மதுவிலக்கு தேவையில்லை என காா்த்தி சிதம்பரம் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. பொது முடக்கம் அமலில் உள்ள வரை மதுக்கடைகளை மூட வேண்டும். பத்தாம் வகுப்புக்கு பொதுத்தோ்வை தற்போது அறிவித்திருக்க கூடாது. தோ்வை உடனடியாக தள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்க வேண்டும் இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை திருடும் சீனா.. அமெரிக்கா வெளியிடும் ஆதாரம்.. தொடங்கியது சைபர் வார்? கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை திருடும் சீனா.. அமெரிக்கா வெளியிடும் ஆதாரம்.. தொடங்கியது சைபர் வார்?

கரூா் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், மாநிலங்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. மாநிலங்களுக்கு நிவாரண நிதியளிக்காவிட்டாலும், ஜிஎஸ்டி மற்றும் இதர வகைகளில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்கினாலே மக்களுக்கான நிவாரணங்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என்றார்.

English summary
Loksabha MP S Thirunavukkarasar has demanded that TamilNadu Govt should give Rs 5000 for each household.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X