சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுலை கமல் சந்தித்த பரபர பின்னணி.. காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி?- திருநாவுக்கரசர் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரசுடன் கமல் கூட்டணியா?.. திருநாவுக்கரசர் தகவல்- வீடியோ

    சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதாக ராகுலிடம் கமல்ஹாசன் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதைத் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து வருகிறார்.

    தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு மக்களிடம் தங்கள் தொகுதிக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும், தீரா பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் கூட்டணி என்ற ஒரு விவகாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் விட்டு வைக்கவில்லை.

    ஆணுறுப்பை வெட்டி கொண்ட மாதானி பாபா சாமியார்.. பரபரப்பு ஆணுறுப்பை வெட்டி கொண்ட மாதானி பாபா சாமியார்.. பரபரப்பு

    முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    டெல்லியில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்வதற்காக டெல்லி சென்ற கமல் ராகுலை சந்தித்து பேசினார். அது போல் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் ராகுலை கமல்ஹாசன் மீண்டும் சந்தித்து பேசினார். இது கூட்டணிக்கான அச்சாரம் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இது மரியாதை நிமித்தம்தான் என கமல் முற்றுப்புள்ளி வைத்தார்.

    கூட்டணி வைக்க விருப்பம்

    கூட்டணி வைக்க விருப்பம்

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் எஸ். திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கமல்ஹாசன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    பக்கா காங்கிரஸ்

    பக்கா காங்கிரஸ்

    காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு கூட்டணி வரும் கமலுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், திமுகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்தார். காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் என்றார். மேலும் தனது தந்தை பக்கா காங்கிரஸ்காரர் என்றும் கூறினார்.

    அறிவிப்பு வருமா

    அறிவிப்பு வருமா

    தற்போது திருநாவுக்கரசரும் கமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற தகவலை பார்க்கும்போது திமுகவில் அங்கமாக உள்ள காங்கிரஸில் கமல் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ்- திமுக கூட்டணி உடைக்கிறதா என்றும் கருதத் தோன்றுகிறது. எனினும் கமல் இதுகுறித்து முறையாக அறிவித்தால் மட்டுமே எதையும் யூகிக்க முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    English summary
    Congress Committee President S.Thirunavukkarasar says that Kamal willing to come for alliance with Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X