சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷா கண்ணசைத்தாலே போதும்.. "அவர்" இங்கே வந்துவிடுவார்.. திருநாவுக்கரசர் என்ன இப்படி சொல்லிட்டாரே

திருநாவுக்கரசர் அதிமுக, பாஜகவை விமர்சித்து பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வதெல்லாம் மோடி அமித்ஷா கையில் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சசிகலா இன்னும் அதிரடி அரசியலில் இறங்காமல் உள்ளார்.. மற்றொரு பக்கம் அவரை கட்சிக்குள் இணைத்து கொள்ளக்கூடாது என்பதில் அதிமுக மேலிடம் உறுதியாக உள்ளது.

இதனால், சசிகலா, டெல்லி பாஜகவிடம் தூது அனுப்பி மூவ் செய்து வருகிறார்.. இதுபோக, அதிமுக நிர்வாகிகள் தன்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் ஓபனாகவே சொல்லி வருகிறார்.

திமுகவை நோக்கி பாஜக அண்ணாமலை கிளப்பிவிட்ட கச்சத்தீவு பிரச்சனை... வாங்கி கட்டுவது என்னவோ அதிமுக! திமுகவை நோக்கி பாஜக அண்ணாமலை கிளப்பிவிட்ட கச்சத்தீவு பிரச்சனை... வாங்கி கட்டுவது என்னவோ அதிமுக!

 திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

இப்படிப்பட்ட சூழலில்தான், இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "போதிய மின்சார தொகுப்பையும் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டும்... மின் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்பட வேண்டும்.. பேரறிவாளன் விவாகாரத்தில் திமுகவுடனான கூட்டணியில் விரிசலோ, உரசலோ இல்லை.

பேரறிவாளன்

பேரறிவாளன்

ஒவ்வொரு கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது சகஜம்தான், அனைத்து கட்சியும் ஒரே கருத்தில் சித்தாந்தத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை... பேரறிவாளன் விடுதலையை திமுக ஆதரிக்கும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு முன்கூட்டியே தெரியும்... அதனால், இது ஒரு விவகாரமே கிடையாது.. அதேபோல, சசிகலாவை அதிமுகவில் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால், இதற்கு இபிஎஸ் ஓபிஎஸ் தான் பதில் சொல்லவேண்டும்...

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

சசிகலாவை அதிமுகவில் சேர்த்தாலும் சரி சேர்க்காவிட்டாலும் சரி என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே ஒன்றுதான்... சசிகலா முயற்சி வெற்றி பெறுமா என்றால் எனக்கு ஜோசியம் பார்க்க தெரியாது. கட்சியை கைப்பற்றுவேன், கட்சியில் சேர்க்கப்படுவேன் என சசிகலா மட்டும் தான் சொல்லிக் கொள்கிறார். ஆனால் ஓபிஎஸ் இபிஎஸ் அப்படி கூறவில்லை சசிகலாவை, அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொல்லுவேன். ஒருவேளை மோடி, அமித்ஷா நினைத்தால் சசிகலா கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படலாம்..

அமித்ஷா

அமித்ஷா

ஏனென்றால், அதிமுகவே, இன்றைக்கு மோடி அமித்ஷா கையில்தான் இருக்கிறது.. மோடியோ அமித்ஷா சசிகலாவை சேர்த்துக் கொள்ள சொன்னால், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பயந்துகொண்டு அவரை சேர்த்துக் கொண்டாலும் சேர்த்துக் கொள்வார்கள்... அதனால், அவர்கள் 2 பேரும்தான் தான் முடிவு செய்யும் அதிகாரத்தில் உள்ளனர். அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இந்த பதவிகளே பாஜகவின் திட்டம் தான்.. ஆக மொத்தம், மோடி, அமித்ஷாவின் திட்டத்தை, அதிமுக செயல்படுத்துகிறது.. அவ்வளவு தான்" என்றார்.

English summary
thirunavukkarasu slams admk and ops, edapadi palanisamy in trichy press meet திருநாவுக்கரசர் அதிமுக, பாஜகவை விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X