சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்போரூர் துப்பாக்கி சூடு.. போலீசார் விசாரணை.. காயமடைந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று நடந்த திருப்போரூர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரின் வீட்டிற்கு அருகே இருக்கும் இமயம்குமார் என்பவர் இடையே இருந்த நிலத்தகராறு காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

Thiruporur Shooting: Wounded person escaped from the hospital after Police investigate

இமயம்குமார் மற்றும் தேமுதிக நிர்வாகி தாண்வமூர்த்தி இணைந்து அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் பணியை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் அங்கு எம்எல்ஏ இதயவர்மன் வீடு அருகே இருக்கும் அரசு நிலத்தை இதயகுமார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். திமுக எம்எல்ஏ இதயவர்மன் இதை தட்டிக்கேட்டு இருக்கிறார்.

அதோடு திமுக எம்எல்ஏ இதயவர்மனின் அப்பா லட்சுமிபதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதுதான் துப்பாக்கி சூட்டில் முடிந்துள்ளது. இதயம்குமாரின் நில அபகரிப்பை தடிக்கேட்க எம்எல்ஏவின் அப்பா லட்சுமிபதி அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது இமயம்குமார் ஆட்கள் லட்சுமிபதியை அரிவாளால் தாக்க வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கு இருந்தவர்களை நோக்கி லட்சுமிபதி குருவிகளை சுடும் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இது தொடர்பாக இமயகுமார் தரப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த அமமுக நிர்வாகி தாண்டவமூர்த்திதான் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த துப்பாக்கி சூடு காரணமாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீதும் அவரின் தந்தை லட்சுமிபதி மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட உலகின் பெரும் கோடீஸ்வரர்.. ஹீரோ போல வந்து காத்த மகன்.. மாஸ் சம்பவம்!துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட உலகின் பெரும் கோடீஸ்வரர்.. ஹீரோ போல வந்து காத்த மகன்.. மாஸ் சம்பவம்!

அதேசமயம் தாண்டவமூர்த்தி மற்றும் இதயகுமார் ஆட்கள், திமுக எம்எல்ஏ இதயவர்மனின் அப்பாவை அரிவாளால் வெட்ட வந்தது தொடர்பாகவும் புகார் உள்ளது. இதை போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதோடு தாங்கள் தற்காப்பிற்காவே துப்பாக்கி சூடு நடத்தினோம் என்று லட்சுமிபதி கூறியுள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பையூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் போலீசார் விசாரிக்க சென்றார்கள். ஆனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து போலீசார் வருவதற்கு முன்பே சீனிவாசன் தப்பி ஓடியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை போலீசார் விசாரிக்க சென்ற போது, அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்.

English summary
Thiruporur Shooting: Wounded person escaped from the hospital after Police investigate the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X