சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்வு முடிவுகள்.. காமராஜரின் விருதுநகரை முந்தும் திருப்பூர் மாவட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளில் விருதுநகரை திருப்பூர் மாவட்டம் முந்திக் கொண்டு முதலிடத்தை பிடித்து வருகிறது.

விருதுநகர் என்றாலே கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த மாவட்டம் என்பதாகும். அந்த பெயருக்கு ஏற்ப பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அந்த மாவட்டமே முன்னிலை வகித்து வந்தது.

சிறப்புக்கு ஏற்ப விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கி வந்தது. இந்த மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்கள் அடங்கும்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி

கல்வியாண்டு முதலிடம்

கல்வியாண்டு முதலிடம்

கடந்த 2001 முதல் 2009-ஆம் ஆண்டு வரையும் 2010-2011 வரையும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து வந்தது. இடையில் 2011- 2012 மற்றும் 2015- 2016-ஆம் கல்வியாண்டு வரை முதலிடத்தை இழந்தது.

விருதுநகர்

விருதுநகர்

இதன் பின்னர், கடந்த 2017 மற்றும் 2018 இல் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. இது போல் எஸ்எஸ்எல்சி தேர்வில் 2017-ஆம் ஆண்டு விருதுநகர் முதலிடத்தையும் 2018-ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

பின்னுக்கு தள்ளப்பட்ட விருதுநகர்

பின்னுக்கு தள்ளப்பட்ட விருதுநகர்

ஆனால் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 7-ஆவது இடத்துக்கு சென்றது. அது போல் எஸ்எஸ்எல்சி தேர்விலும் விருதுநகர் மாவட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. இந்த முடிவுகளால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது.

மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களுக்கு அறிவுரை

இந்த பின்னடைவால் விருதுநகர் மாவட்ட கல்வியாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் கல்வியில் பெற்ற பெயரை மீட்டெடுக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

English summary
Thiruppur District is overtaking Virudhunagar in both SSLC and Plus 2 results passing percentage. Educationists concern over Virudhunagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X