சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவண்ணாமலை ஏரி சவ்வூடு மண் தடை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: திருவண்ணாமலை ஏரியில் சவ்வூடு மண் அள்ள தடை விதிக்க கோரிய வழக்கில், மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள எடத்துனூர் மாந்தோப்பு என்ற மிக பெரிய ஏரி அப்பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

Thiruvannamalai savvudu soil issue, High Court makes orer

இந்த ஏரியை தூர் வாரஅனுமதி பெற்று ஸ்ரீராமசந்திர அறக்கட்டளையை சேர்ந்த ஏழுமலை என்பவர், ஏரியில் இருந்து அளவுக்கதிகமாக சவ்வூடு மணல் எடுத்து வணிக நோக்கி செயல்ப்பட்டு உள்ளார். இதனால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட ஏரியில் தூர் வார அனுமதி பெற்று சவ்வூடு அள்ளுவதற்கு தடை விதிக்க கோரி கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி அமர்வு, இது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

English summary
The Chennai High Court has ordered the district administration to file a report in the case of the prohibition of savvudu soil in Thiruvannamalai Lake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X