சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபார்ட்மென்ட்டில் ரகசிய ரூம்.. 10 வருடத்தில் 19 ஆயிரம் அபார்ஷன்கள்.. அதிர வைக்கும் ஆனந்தி!

கருக்கலைப்பில் ஈடுபட்ட தம்பதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    10 வருடத்தில் 8000 அபார்ஷன்கள் செய்த போலி டாக்டர் கைது- வீடியோ

    திருவண்ணாமலை: படித்தது பிளஸ் 2!! செய்றது என்னவோ டாக்டர் வேலை.. அதான் தூக்கி உள்ளே வெச்சி... குண்டர் சட்டமே பாயும் நிலைமை ஆயிடுச்சு!!

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் ஒரு அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்குதான் அந்த டுபாக்கூர் டாக்டர் ஆனந்தி பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் மையம் நடத்தி வந்தார். இந்த தகவல் போலீசாருக்கு சென்றதையடுத்து விரைந்து வந்து அபார்ட்மென்ட்டை பார்த்தார்கள்.

    அபார்ஷன் செய்றதுக்கு ஒரு தனி ரகசிய ரூம், அபார்ஷனுக்கு வரும் பெண்களை தங்க வைக்க 3 ரூம் இருந்ததை பார்த்ததும்தான் போலீசார் அதிர்ச்சி ஆனார்கள். விஷயம் ரொம்ப பெரிசு போல இருக்கே என்று தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

    ஏற்கனவே கைதானவர்

    ஏற்கனவே கைதானவர்

    அப்போதுதான் அந்த டாக்டரை போலீசார் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள். அதாவது 2 முறை இதே போல பெண்களுக்கு அபார்ஷன் செய்த குற்றத்துக்காக கைதானவர் என்பது தெரிந்தது. 2016ம் ஆண்டு இப்படித்தான் அபார்ஷனுக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள்.

    2 பேர் உடந்தை

    2 பேர் உடந்தை

    ஒன்றல்ல, ரெண்டல்ல, 9 பெண்களையும் வரிசையாக படுக்க வைத்து மயக்க மருந்து கொடுத்து, பின்னர் ஆபத்தான நிலைக்கு சென்ற அவர்களை போலீசார் சென்று மீட்டு வந்தார்கள். தற்போதும் இப்படியே தன் வேலையை ஆரம்பித்துள்ளார் ஆனந்தி. அவருக்கு உடந்தையாக கணவன் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவகுமார் ஆகியோரை வளைத்து பிடித்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆட்டோ சார்ஜ் 2

    ஆட்டோ சார்ஜ் 2

    இதுல இந்தஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஒரு தனி வயித்தெரிச்சல். இவர் வேலை என்னவென்றால், அபார்ஷனுக்கு வரும் பெண்களை பஸ் ஸ்டேண்டிலிருந்து ஆனந்தி வீட்டுக்கு கூட்டி வந்து திரும்பவும் பத்திரமாக பஸ் ஏற்றி அனுப்புவதுதான். இதற்காக இவருக்கு ஆட்டோ சார்ஜ் 2 ஆயிரமாம். அதுவும் பக்கத்துலதான் பஸ் ஸ்டேண்ட் இருக்குமாம். ஆனாலும் யாரும் தம்மை கண்டுபிடிக்காதவாறு சுற்றி சுற்றி கூட்டிக் கொண்டு போவாராம்.

    19 ஆயிரம் அபார்ஷன்

    19 ஆயிரம் அபார்ஷன்

    இந்த ஆனந்தியால் ஆயிரக்கணக்கான சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. அதாவது 10 வருஷத்துல 19 ஆயிரம் கருக்கலைப்புக்கும் மேல இவர் செய்திருக்கிறார். எல்லா பெண்களையுமே ராத்திரியில்தான் இவர் வீட்டுக்கு வரவழைப்பாராம். திருவண்ணாமலை மாவட்டத்தின் பிறப்பு எண்ணிக்கையையே இந்த ஆனந்தி குறைத்திருக்கிறார் என்பதுதான் உச்சக்கட்ட ஷாக்!! இதனை சொன்னது மாவட்ட நீதிபதி மகிழேந்திதான்! தன் மாவட்டம் உட்பட எல்லா மாவட்டங்களிலும் டீலிங் வைத்திருந்திருக்கிறார் ஆனந்தி.

    பண வசூல்

    பண வசூல்

    ஆனந்தியின் செல்போனை ஆய் செய்ததில் தினமும் ஒரே நாளில் 25 கருக்கலைப்புகளுக்கு போன் கால் வந்திருந்தது தெரியவந்தது. அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதித்துள்ளார் என்று போலீசார் கூறுகிறார்கள். சில நேரங்களில் இவர் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்கே சென்று கருக்கலைப்பு செய்துவிட்டு வருவாராம். அதற்கான உபகரணங்களை கையோடு கொண்டு செல்வாராம் ஆனந்தி. இப்படி மொபைல் சர்வீஸ் மூலமாகவும் அபார்ஷன் நடந்திருக்கிறது என்கிறார்கள் போலீசார்.

    குண்டர் சட்டம்

    குண்டர் சட்டம்

    அதனால்தான் ஏராளமான பெண்கள் அபார்ஷன் என்றாலே ஆனந்திதான் என்று நம்பி ஊரிலிருந்து கிளம்பி வந்திருக்கிறார்கள். இதற்கான புரோக்கர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது. இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்த 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

     தலைகுனிவு

    தலைகுனிவு

    இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மிகவும் வேதனை தெரிவித்தார். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு பள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், "10 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பினை போலி மருத்துவர் ஆனந்தி செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பெண்கள் சதவீத கருத்தரங்கில் இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது" என்றார்.

    English summary
    Couple arrested for illegal abortion in Thiruvannamalai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X