சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவாரூர் இடைத்தேர்தலை ஸ்டாலின் நிறுத்த முயற்சி செய்கிறார்.. டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு

திருவாரூர் இடைத்தேர்தலை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்த முயற்சி செய்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தலை ஸ்டாலின் நிறுத்த முயற்சி செய்கிறார் - டிடிவி தினகரன்

    சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்த முயற்சி செய்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர் தேர்தல் களம் நிமிடத்திற்கு நிமிடம் சூடு பிடித்துக் கொண்டே இருக்கிறது. முக்கியமாக திமுக, அமமுக கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது.

    Thiruvarur by-election 2019: DMK is fearing of AMMK says TTV Dinakaran

    டிடிவி தினகரனை மக்கள் எல்லோரும் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கிறார்கள். டிடிவி தினகரன் மீது நிறைய வழக்கு நிலுவையில் உள்ளது. தினகரன் தேர்தலை பார்த்து பயப்படுகிறார், என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் ஸ்டாலினின் கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். சுவாமிமலையில் அவர் பேட்டியளித்தார்.

    அதில், கூட்டணி கட்சிகளை வைத்து தேர்தலை நிறுத்த ஸ்டாலின் திட்டமிடுகிறார்.ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்த கட்சிதான் திமுக.

    ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் திருவாரூரில் நிற்க பயப்படுகின்றன. அதிமுக, பாஜக என எல்லா கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பயப்படுகிறது.

    ஆர்.கே நகரை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் அமமுக வெற்றிபெறும். திருவாரூரில் மக்கள் அம்மா மக்கள் முன்னேற்றத்திற்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்கள் பதிவு செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Thiruvarur by-election 2019: DMK and Stalin are fearing of AMMK says TTV Dinakaran
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X