சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது தேவையா.. ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம்

ரபேல் ஊழல் குறித்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' புத்தகம் ஒரே நாளில் பெரிய ஹிட் அடித்து அதிக அளவில் விற்பனை ஆகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rafale deal book: தடையை மீறி ரஃபேல் பேர ஊழல் புத்தகத்தை வெளியிட்டு ராம் பரபரப்பு பேட்டி- வீடியோ

    சென்னை: ரபேல் ஊழல் குறித்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' புத்தகம் ஒரே நாளில் பெரிய ஹிட் அடித்து அதிக அளவில் விற்பனை ஆகி இருக்கிறது.

    சனியனை தூக்கி பனியனுக்குள் விட்டுக்கொள்வது என்று 90'ஸ் கிட்ஸ்களின் இடையே ஒரு வாசகம் வழக்கத்தில் இருந்தது. அதுதான் நேற்று ரபேல் விவகாரத்தில் நிஜத்தில் நடந்து இருக்கிறது.

    உலகம் முழுக்க அடக்குமுறைக்கு உள்ளான எழுத்தாளர்கள் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறார்கள். சாதாரண புத்தகங்களை விட தடை செய்யப்பட்ட புத்தகங்கள்தான் அதிக மக்களால் உலகம் முழுக்க விரும்பி படிக்கப்பட்டு இருக்கிறது. அப்படிதான் தற்போது ரபேல் புத்தகமும் வைரலானது.

    திமுகவின் வழியை பின்பற்றும் காங்கிரஸ்.. ராகுல் காந்தி நிலைப்பாட்டில் அடடே மாற்றம்.. என்ன காரணம்? திமுகவின் வழியை பின்பற்றும் காங்கிரஸ்.. ராகுல் காந்தி நிலைப்பாட்டில் அடடே மாற்றம்.. என்ன காரணம்?

    தடை விதித்தது

    தடை விதித்தது

    ரபேல் ஊழல் தொடர்பாக வெளியாக இருந்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்து இருந்தது. "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" என்ற புத்தகம் எழுத்தாளர் எஸ். விஜயன் மூலம் எழுதப்பட்டது. ரபேல் பேரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து அவர் இந்த புத்தகத்தில் விவரித்து இருக்கிறார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ரபேல் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த புத்தகம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கான புத்தக வெளியீட்டு விழா பாரதி புத்தகாலயம் சார்பாக சென்னை கேரளா சமாஜத்தில் இன்று நடக்க இருந்தது. தி இந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது . இந்த நிலையில் "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.

    வாபஸ் பெறப்பட்டது

    வாபஸ் பெறப்பட்டது

    ஆனால் அதன்பின் இதை சென்னை தேர்தல் அதிகாரிகள் தவறுதலாக தடை செய்துவிட்டதாக கூறப்பட்டது . பின் தேர்தல் ஆணையம் இந்த புத்தகத்தை வெளியிட அனுமதி அளித்தது. அதன்பின் நேற்று மாலையே இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த தடை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தேர்தல் ஆணையமும் விளக்கம் கேட்டு இருக்கிறது.

    என்ன நிலைமை

    என்ன நிலைமை

    என்னதான் தமிழக இலக்கிய உலகம் தற்போது பெரிய அளவில் வளர்ந்து கொண்டு இருந்தாலும் மக்கள் புத்தகம் வாங்கி படிப்பது மிகவும் குறைந்துவிட்டது. முக்கியமாக தமிழ் புத்தகங்கள் முன்பு போல இப்போதெல்லாம் பெரிய அளவில் விற்பனை செய்து சாதனை படைப்பது கிடையாது. இந்த ரபேல் புத்தகமும் அப்படித்தான் குறைந்த அளவில் ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே வாங்கப்படும் என்று கருதப்பட்டது.

    சூப்பர்

    சூப்பர்

    ஆனால் நிஜத்தில் நடந்தது வேறு. தேர்தல் ஆணையம் கொடுத்த இலவச விளம்பரம் காரணமாக இந்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' பெரிய ஹிட் அடித்து இருக்கிறது. முதலில் இந்த புத்தக வெளியீட்டு விழா தடை செய்யப்பட்ட உடனே, புத்தகத்தின் பிடிஎப் காப்பி வெளியானது. இணையம் முழுக்க பலரிடம் பரப்பப்பட்டது.

    எவ்வளவு

    எவ்வளவு

    பேஸ்புக்கில் பலர் இந்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' புத்தகத்தின் பிடிஎப் பைலை ஷேர் செய்து இருந்தனர். வாட்ஸ் ஆப் முழுக்க இந்த புத்தகம் பலருக்கு ஷேர் செய்யப்பட்டது. விளைவு நேற்று மட்டும் இரவுக்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' பிடிஎப் பைல்கள் தமிழகத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.

    மாஸ்

    மாஸ்

    அதுமட்டுமல்ல நேற்று பிரச்சனைகளுக்கு பின் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் புத்தகம் படுவேகமாக விற்றுத் தீர்த்தது. சுமார் 100+ புத்தகங்கள் முதற்கட்டமாக விற்கும் என்று கருதப்பட்ட நிலையில் மொத்தமாக 8000+ புத்தகங்கள் இரண்டு மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது. தமிழகம் முழுக்க ஒரே நாளில் இந்த புத்தகம் வைரல் ஆனது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    ஆனால் இத்தனையும் நடந்தது வெறும் 146 பிரதிகளை கைப்பற்றியதால்தான் என்பதை நம்ப முடிகிறதா. நேற்று இந்த 146 ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' புத்தகத்தின் பிரதிகளை கைப்பற்றியதால்தான் பெரிய சர்ச்சை உருவானது. அதன் தொடர்ச்சியாகத்தான் புத்தகம் தமிழகம் முழுக்க வைரலாகி இருகிறது.

    English summary
    This book on Rafale became viral in Tamilnadu after an issue with Election Commission of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X