சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆல்வேஸ் வெல்கம்.. செம சாப்பாடு.. செமத்தியான சமையல்.. செம ருசி பாஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Video : CHETTINAD MUTTON GRAVY

    சென்னை: சமையல் என்பதும் சாப்பிடுவது என்பதும் ஒரு கலை. இதை ரசித்து செய்தால் ருசித்து சாப்பிடலாம். சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடிக்கும். தேடித் தேடி எங்கு சாப்பிடுவது என்று அதையே ஒரு வேலையாக செய்பவர்களும் உண்டு.

    வீட்டில் இல்லத்தரசிகள் நன்றாக சமைத்து கணவனை தான் கட்டிப்போட்டு வைத்து இருப்பார்கள். இதே போல அம்மா கை சமையலுக்கு என்று ஒரு பக்குவமும் உண்டு.

    என்னதான் மனைவி கையால் சமைத்தாலும், அம்மா கை சமையலுக்கு ஏங்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் பெண்களும்கூட அம்மாவின் சமையலுக்கு அடிமை, அம்மா கைப்பக்குவம் தனக்கு வரவில்லை என்று நினைப்பது உண்டு.

    யூடியூப் சேனல்

    யூடியூப் சேனல்

    கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வில்லேஜ் குக்கிங் என்று ஒரு யூடியூப் சேனல் மிகவும் பிரபலமாகி வருகிறது. நான்கு இளைஞர்கள் வயல் வெளிகளில் சமைப்பது, அதை அருகிலுள்ள ஆஷ்ரமங்களில் இருப்பவர்களுக்கு கொடுத்து சாப்பிட செய்து ரசிப்பது என்கிற பணியை செய்து வருகின்றனர்.

    வயற்காட்டில் சமையல்

    வயற்காட்டில் சமையல்

    இந்த முறை வயற்காட்டில் கிடா கறி குழம்பு, வறுவல் என்று செட்டி நாடு ஸ்டைலில் செய்து, அசத்தி இருக்கிறார்கள்.முழுக்க கிடாக்களை அவர்கள் மஞ்சள் தடவி வெட்டி, அதை பம்ப் செட் நீரில் அலசி, சமைக்க துவங்குகிறார்கள். செட்டிநாடு சமையலில் மசாலாக்களை அரைத்து பின்னர் அதை சமையலில் சேர்ப்பது என்பதுதான் இதன் சிறப்பு என்று சொல்கிறார்கள்.

    கறியை எடுத்து

    கறியை எடுத்து

    முதலில் மசாலாவை வறுத்து, உரலில் இடித்து பொடியாக கிடா கறி குழம்பில் சேர்க்கிறார்கள். பின்னர் அந்த கறியை எடுத்து நிறைய முழு சின்ன வெங்காயம் , மசாலா பொடி, முழுசாக காய்ந்த மிளகாய் போட்டு கறியை வறுத்து எடுக்கிறார்கள். இது ஒரு தனி சுவையைத் தருகிறது என்றும் சொல்கிறார்கள்.

    இலை நிறைய சோறு

    வயற்காட்டில் வாழை இலையை வரிசையாகப் போட்டு, அங்கு வேலை செய்யும் கிராமத்து ஆட்களை உட்கார வைத்து சமைத்த இளைஞர்கள் பரிமாற, அவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் அழகே தனியாக இருக்கிறது. இதில் சிறுமிகளும், சிறுவர்களும் கூட உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இப்படி செய்வது இவர்களின் சிறப்பு அம்சமாக பாராட்டப் படுகிறது.

    English summary
    A YouTube channel called Village Cooking has been gaining in popularity over the past two years. Four young men are doing the task of cooking in the fields and giving it to those in the nearby ashrams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X