சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆனாலும் இவருக்கு பேராசை தான்.. அஜித் கேட்டே கிடைக்கல.. இவரு கேட்டா கிடைச்சுடுமா?

'கொரோனா விடுதலை பாடல்' எனும் தலைப்பில் பாடல் வரிகள் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அஜித்தின் அமர்க்களம் படத்தில் வரும், 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாணியில், 'கொரோனா விடுதலை பாடல்' எனும் தலைப்பில் வித்தியாசமான பாடல் வரிகள் கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய திருநாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. ஆனால் இப்போது கொரோனா தொற்று நம்மை சிறைப்படுத்தியுள்ளதால், அதில் இருந்து எப்போது சுதந்திரம் அடையப்போகிறோம் என்பதே பலரது கவலையாக இருக்கிறது.

அதை மட்டும் பார்க்காதீங்க.. இரண்டையும் பாருங்க ரசிகர்களே.. சிணுங்கும் தர்ஷா குப்தாஅதை மட்டும் பார்க்காதீங்க.. இரண்டையும் பாருங்க ரசிகர்களே.. சிணுங்கும் தர்ஷா குப்தா

This corona freedom song lyrics is viral now

இந்த சூழலில் கொரோனா விடுதலை பாடல் எனும் தலைப்பில், அர்த்தமுள்ள பாடல் வரிகள் கொண்ட புகைப்படம் ஒன்று வாட்ஸப்பில் தீயாக பரவி வருகிறது. அமர்க்களம் படத்தில் நடிகர் அஜித், செஞ்சி மலைக்கோட்டை உச்சியில் மூச்சுவிடாமல் ஷாலினிடம் சுற்றி சுற்றி பாடுவாரே 'சத்தம் இல்லாத தனிமைக் கேட்டேன்' என, அந்த பாடலைத்தான் தற்போதைய சூழலுக்கு ஏற்ப வார்தைகளை மாற்றிப் போட்டு பரவவிட்டிருக்கிறார்கள்.

This corona freedom song lyrics is viral now

இப்போது இருக்கும் சூழலுக்கும், மனிதர்களின் எண்ணத்துக்கும் கச்சிதமாக பொருந்துகிறது அப்பாடல். அதில் உள்ள வரிகள் இவை தான்..

கட்டாயம் இல்லாத தனிமை கேட்டேன்..
ரத்தத்தில் என்னென்றும் நெகட்டிவ் கேட்டேன்..
ஆன்ட்டி வைரஸ் தடுப்பூசி கேட்டேன்..
திணறல் இல்லாத வைத்தியம் கேட்டேன்..
மாஸ்க் இல்லாத முகங்கள் கேட்டேன்..
கொரோனா இல்லாத உலகம் கேட்டேன்..
பறந்து செல்ல விமானம் கேட்டேன்..
ஈ பாஸ் இல்லாத பயணம் கேட்டேன்..
செவிலியர் முகத்தில் சிரிப்பை கேட்டேன்..
காய்ச்சல் எல்லாம் குறையக் கேட்டேன்..
வெள்ளித்திரையில் சினிமா கேட்டேன்..
உலகுக்கெல்லாம் நிம்மதி கேட்டேன்..
ஊருக்கெல்லாம் வேக்சின் கேட்டேன்..
மக்களுக்கெல்லாம் வேலைகள் கேட்டேன்..
அத்தனை பேருக்கும் ஆரோக்கியம் கேட்டேன்..
பள்ளி வகுப்பில் பயிலக் கேட்டேன்..
ஹாஸ்டலில் ஒருநாள் வசிக்கக் கேட்டேன்..
கேன்டீன் டீயை ருசிக்கக் கேட்டேன்..

இப்படியாக நீள்கிறது அப்பாடல் வரிகள். இதை பார்க்கும் போது நம்மை போலவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் தான் எழுதியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 'பாவம் யார் பெத்த புள்ளையோ இப்படி பீல் பண்ணிருக்கே' என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

English summary
A lyrical image titled 'Corona freedom song' is circulating in social media viraly. The song is inspired from actor Ajith's famous song from Amarkalam movie 'Satham illatha thanimai ketean'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X