சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் அடித்துச் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ்.. பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி செய்யப்போகிறார் அதிகாரம் செய்யப்போகிறார் என்பது உண்மை. ஆட்சி மாற்றம் மட்டுமே தேர்தலின் நோக்கம் என்பது கிடையாது. இந்த தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வரலாற்றை எழுதப் போகிற தேர்தல் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்டாலினை வாழ்த்துகிறார்கள்

தமிழ்நாட்டை நேசிக்கின்றவர்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க விரும்புபவர்கள் எல்லோரும் இன்று மனமார தளபதி வாழ்க என்று சொல்லுகின்ற அந்த வாழ்த்துக்கள் தான் பெரிய தலைவனுக்கு உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் எதிரே வரும் சவால்களை சமாளிக்க துணிவையும் திறமையையும் அந்த வாழ்த்துக்கள் தான் தருகின்றன என தெரிவித்தார்

தேர்தல்

தேர்தல்

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி செய்யப்போகிறார் அதிகாரம் செய்யப்போகிறார் என்பது உண்மை. ஆட்சி மாற்றம் மட்டுமே தேர்தலின் நோக்கம் என்பது கிடையாது. இந்த தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வரலாற்றை எழுதப் போகிற தேர்தல். தமிழகம் இதுவரை பயணித்திருந்த பாதைகளையும் பெருமைகளையும், தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் தரப்பட்டு இருக்கின்ற சலுகைகளையும், தமிழ் மொழிக்கு தமிழ் இனத்திற்கு தமிழ்நாட்டிற்கு தமிழ் நாட்டின் வளர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு தேர்தலாக இருக்கும்.

அமித்ஷா பேச்சு

அமித்ஷா பேச்சு

வருகின்ற தேர்தல் தமிழ்நாட்டை இரட்டை இன்ஜினை போன்று வலிமைப்பெற இருப்பதாக அமித்ஷா கூறுகிறார் இரட்டை எஞ்சின் என்றால் ஒன்று அதிமுக இன்னொன்று பாஜக. தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லுகின்ற தேர்தல் என்று அமித்ஷா நேற்று கூறியுள்ளார்

ஸ்டாலினுக்கு உள்ளது

ஸ்டாலினுக்கு உள்ளது

ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்திற்கு மறுக்கப்பட்ட அநீதிகள் நமக்கு வரவேண்டிய வருவாய் தொகுப்பு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கீடு பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டிய தைரியம் ஆறு ஆண்டுகளில் இபிஎஸ் ஓபிஎஸ் இடம் இருந்ததா? தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய வருவாய் பங்குகளை, திட்டங்களை கேட்க கூடிய தைரியம் உடையவர் தான் தமிழகத்தின் முதல்வராக வர இருக்கும் மு க ஸ்டாலின்.

மத்திய அரசு

மத்திய அரசு

54 மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழிக்காக ஒரு பள்ளிகளில் கூட தமிழ் ஆசிரியர் இல்லை ஆயிரம் பேர் கூட பேசாத சமஸ்கிருதத்தை சொல்லிக் கொடுப்பதற்கு 54 பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் இந்தியை சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் தமிழ் மக்களின் இடத்தில் தமிழர்களின் வரிப்பணத்தில் கட்டிய பள்ளிகளில் தமிழ்மொழிக்கு இடம் இல்லை. இதை மத்திய அரசிடம் கேட்பதற்கு எடப்பாடிக்கு பன்னீர்செல்வத்துக்கு தைரியம் உண்டா? அதை கேட்பதற்கு ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் அந்த தைரியம் அவரிடம் மட்டும் தான் உண்டு" இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

English summary
congress leader Peter Alphonse wishes stalin that stalin become chief minister upcoming election. This election is going to write the history of Tamil Nadu for the next 25 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X