சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போற போக்க பார்த்தா.. இந்த வருஷம் எல்கேஜி யூனிபார்ம் இதுதானா.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சனை அதிகரித்து உள்ள நிலையில் பள்ளிள் எப்போது திறக்கப்படும் என்பது இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில எல்ஜேஜி யூனிபார்ம் இப்படித்தான் இருக்கும் என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,536 ஆக உயர்ந்துள்ளது. தினமும் 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 57,692 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துவிட்ட நிலையில், 76,811 பேர் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4024 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணிகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி

மகாராஷ்டிரா அதிகம்

மகாராஷ்டிரா அதிகம்

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்து 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 16277 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் 14063 பேரும், ராஜஸ்தானில் 13418 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மூடப்பட்ட பள்ளிகள்

மூடப்பட்ட பள்ளிகள்

நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. இதற்கிடையே பள்ளிகள் மார்ச் 3வது வாரத்துடன் மூடப்பட்ட நிலையில் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை நான்கு முறை நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

ஆகஸ்டில் திறப்பா

ஆகஸ்டில் திறப்பா

10ம் வகுப்பு தேர்வுகள் நாடு முழுவதும் இன்னும் பல மாநிலங்களில் நடைபெறவில்லை. குறிப்பாக தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ஜுன் 15க்கு பிறகே நடத்தப்படும் என தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் ஆகஸ்டில் திறக்கப்படுமா, அல்லது ஜுலையில் திறக்கப்படுமா என்பது குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஊரடங்கால் முடக்கம்

ஊரடங்கால் முடக்கம்

குறிப்பாக எல்கேஜி சேர்க்கைகள் மார்ச் மாத அட்மிஷன் களை கட்டியிருக்க வேண்டிய நிலையில் ஊரடங்கால் முடங்கி உள்ளது. பிரபலமான பள்ளிகளில் மட்டும் ஜனவரியிலேயே முடிந்திருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் கடுமையான பாதிப்பு உள்ள நிலையில் இனி வரும் காலத்தில் எல்கேஜி யூனிபார்ம் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

எல்கேஜி சீருடை

எல்கேஜி சீருடை

அந்த வீடியோவில் சிறு குழந்தைகள் முழுகவச உடை அணிந்தபடி செல்கிறார்கள். கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் போல் உடை அணிந்து செல்கிறார்கள். மருத்துவர்கள் அணியும் கவச உடை போலவும் உள்ளது. கொரோனா பரவும் வேகத்தை பார்த்தால் இப்படி ஒரு உடை அணிந்துதான் உலகின் பல நாடுகளில் பள்ளிகளில் எல்கேஜி திறக்கப்படுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

English summary
covid 19 issue: this is funny "Next year LKG uniform"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X