சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈஸ்டர் நாள் தாக்குதல்.. இது முதல் முறையல்ல.. ரத்தம் சிந்திய கிறிஸ்தவர்களின் வரலாறு!

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா? போலீஸ் வெளியிட்ட வீடியோ

    சென்னை: இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் தாக்குதல் நடத்தப் பட்டது போல இதற்கு முன்னரும் ஈஸ்டர் ஞாயிறை குறிவைத்தும், கிறிஸ்தவர்களை குறிவைத்தும் சில தாக்குதல்கள் நடந்துள்ளன.

    லாகூர்

    லாகூர்

    அது 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 27 ம் தேதி. உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக லாகூர் நகரில் உள்ள குல்ஷா - ஏ - இக்பால் என்ற பூங்காவில் குழந்தைகள் பெண்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர்.

    அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதி ஒருவன் தன உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் நிகழ்விடத்திலேயே 72 பேர் உயிரிழந்தனர். 300 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ- தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற ஜமாதுல் அஹ்ரர் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. கிறிஸ்தவர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப் பட்டது என்று அந்த பயங்கரவாத அமைப்பு கூறியது. இதற்கு அப்போதிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    நைஜீரியா

    நைஜீரியா

    இந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இப்படி இருக்கும்போது கடுனா என்ற நகரத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது தற்கொலைப் படையை சேர்ந்த ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய ஜீப்பை தேவாலயத்தின் மீது குண்டுகளை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் 75 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அப்போது போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பெற்றுகொண்டது.

    எனக்கு ஏன் கோபம் வராது தெரியுமா?.. அக்ஷய்குமாருக்கு பிரதமர் மோடி அளித்த திடீர் பேட்டிஎனக்கு ஏன் கோபம் வராது தெரியுமா?.. அக்ஷய்குமாருக்கு பிரதமர் மோடி அளித்த திடீர் பேட்டி

    ஏமன்

    ஏமன்

    கடந்த 2016 மார்ச் மாதம் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் சில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்த கிறிஸ்தவ முதியோர் இல்லம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கன்னியாஸ்திரிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இதில் அங்கு தங்கியிருந்த முதியோர்களும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இறந்த கன்னியாஸ்திரிகள் அன்னை தெரசா ஏற்படுத்தியிருந்த சபையில் பணியாற்றி வந்தவர்கள். இதில் கேரளாவை சேர்ந்த தாம் உழுனல்லில் என்ற பாதிரியார் சிறை பிடித்து செல்லப்பட்டார். பின்னர் அவர் இந்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டார்.

    எகிப்து

    எகிப்து

    எகிப்து நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இந்த நாட்டில் 10% கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் அச்சுறுத்தலோடுதான் வாழ்ந்து வருகின்றனர். 2017 ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் முன்னர் வரும் குருத்து ஞாயிறு சிறப்பு வழிபாட்டுக்காக கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் குழுமியிருந்தனர். அப்போது அலெக்ஸ்சாண்ட்ரியா மற்றும் தாண்டா ஆகிய நகரங்களில் உள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. இந்த தாக்குதலில் 49 பேர் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலை இரண்டு பயங்கரவாதிகள் நடத்தினர். அதில் ஒருவன் ஏற்கனவே 2016 -ம் ஆண்டு கைரோவில் நடந்த தேவாலய தாக்குதலில் தொடர்புடையவன் என்பது குறிப்பிட தக்கது

    English summary
    There were many instances the terrorists have attacked the Churches and Christians during Easter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X