சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிடைக்கிற கேப்பல்லாம் யூஸ் பண்ணிப்போம்ல.. இதுதாங்க உண்மையான இந்திய மண்.. சொல்கிறார் எஸ்வி சேகர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    S.V. Sekar press meet | தமிழகத்தில் பாஜக தோல்விக்கு காரணம் தெரியும்: எஸ்.வி. சேகர் கருத்து

    சென்னை: இஸ்லாமிய தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் சூட்டப்பட்டதுதான் உண்மையான இந்திய மண் என தமிழக பாஜக மூத்த நிர்வாகியான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 23ஆம் தேதி நாட்டின் 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாயின. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கும் மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது.

    மீண்டும் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நடிகரும் தமிழக பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    மே.வங்கத்தில் ஒட்டுமொத்த இந்துக்கள் வாக்குகளை அள்ளிய பாஜக! மே.வங்கத்தில் ஒட்டுமொத்த இந்துக்கள் வாக்குகளை அள்ளிய பாஜக!

    உண்மையான இந்திய மண்

    அதில் இதுதான் உண்மையான இந்திய மண் என்று குறிப்பிட்டுள்ள அவர் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 23ஆம் தேதி இஸ்லாமிய தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திரமோடி என பெயர் சூட்டப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டியுள்ளார்.

    மீண்டும் பிரதமர்

    மீண்டும் பிரதமர்

    கடந்த 23ஆம் தேதிதான் நாட்டின் மக்களவைத் தேர்தல் முடிவு வெளியானது. அன்றுதான் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    பிறந்த குழந்தை

    பிறந்த குழந்தை

    அன்றைய நாளில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கொண்டா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் அமீரகத்தில் பணியாற்றும் குழந்தையின் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது.

    மோடியின் பெயர்

    மோடியின் பெயர்

    இதைத்தொடர்ந்து தனது குழந்தைக்கு நரேந்திர தாமோதர்தாஸ் என பெயர் சூட்டினர். இந்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

    எஸ்வி சேகர் பெருமிதம்

    எஸ்வி சேகர் பெருமிதம்

    எதிர்க்கட்சிகள் மோடியின் அரசு இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இந்த செய்தியை சுட்டிக்காட்டி பெருமிதம் கொண்டுள்ளார் எஸ்வி சேகர்.

    தமிழ் மண்ணா?

    தமிழ் மண்ணா?

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் தனக்கு தானே தலையில் மண்ணை அள்ளி கொட்டிக்கொள்ளும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் எஸ்விசேகர். மேலும் இதுதான் தமிழ் மண்ணா எனக்கேட்டு பாஜக எதிர்ப்பாளர்களை வெறுப்பேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu BJP executive SV Shekher has twitted that This is true land of India mentioning a news in a daily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X