சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலையே சுத்திடும்! ஒரு கிலோ மாங்காவிற்கு இவ்வளவு லட்சமா! அதுவும் இந்தியாவில்! அப்படி என்ன சிறப்பு?

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே காஸ்ட்லியான மாங்காய் ஒன்றின் புகைப்படத்தை பிரபல தொழில் அதிபர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்டுள்ளார். இந்த மாங்காவின் விலையை கேட்பதற்கு முன் கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து கொள்ளுங்கள்.. அதிர்ச்சியில் தலை சுற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

இந்தியாவில் விளையும் சில உணவு பொருட்கள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் அதன் சிறப்பு அம்சங்கள் காரணமாக அதிக விலைக்கு விற்பனை ஆகும். அதிலும் சில பழ வகைகள் அதன் இனிப்பு சுவை மற்றும் மருத்துவ குணம் காரணமாக அதிக விலைக்கு விற்பனை ஆகும்.

நீங்கல்லாம் பூமர் அங்கிள்.. டிடிஎப் வாசன் எங்க கிங்.. உறுமும் 2கே கிட்ஸ்! அது என்ன பூமர் தெரியுமா? நீங்கல்லாம் பூமர் அங்கிள்.. டிடிஎப் வாசன் எங்க கிங்.. உறுமும் 2கே கிட்ஸ்! அது என்ன பூமர் தெரியுமா?

அந்த வகையில் ஐபிஎல்லில் லக்னோ அணியின் உரிமையாளராக இருக்கும் ஹர்ஷ் கோயங்கா முக்கியமான மாங்காய் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

மாங்காய்

மாங்காய்

மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த மாங்காய் ஆகும் இது. இதை மியாசாகி மாங்காய் என்று அழைப்பார்கள். இந்த மியாசாகி மாங்காய் ஜப்பானை பூர்வீகமாக கொண்டது. தற்போது வடஇந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பார்க்க கொஞ்சம் சிவப்பு மற்றும் நீல நிறம் கலந்து இந்த மாங்காய் காணப்படும். கருப்பு நிற திராட்சை மாங்காய் அளவிற்கு வளர்ந்தால் எப்படி இருக்கும்.. அப்படிப்பட்ட தோற்றத்தை கொண்டு இருக்கும் இது.

எவ்வளவு பாதுகாப்பு?

எவ்வளவு பாதுகாப்பு?

மகாராஷ்டிராவில் பரிஹார் என்ற விவசாயி இந்த மாங்காவை தனது தோட்டத்தில் அதிகம் வளர்க்கிறார்.ஜப்பானில் இருந்து கன்றுகளை வாங்கி வந்து அதை இவர் தோட்டத்தில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்திற்கு இதற்காக அவர் சிறப்பு பாதுகாப்பு போட்டுள்ளார். தனது தோட்டத்திற்கு 3 பாதுகாவலர்களை நியமனம் செய்து உள்ளார். அதேபோல் 6 வேட்டை நாய்களை நியமனம் செய்து தனது தோட்டத்தை பாதுகாத்து வருகிறார்.

ஏன் இந்த பெயர்?

ஏன் இந்த பெயர்?

மியாசாகி என்பதன் அர்த்தம் "சூரிய ஒளி" என்பது ஆகும். மாங்காயின் கலர் மற்றும் வடிவம் காரணமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாங்காய் மட்டும் 350 கிராம் எடை கொண்டது ஆகும். இதில் அதிக அளவில் antioxidants, beta-carotene மற்றும் folic acid ஆகியவை உள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்த மாங்காய் வளரும்.

இந்த மாங்காய் பின்வரும் நற்குணங்களை கொண்டது

இந்த மாங்காய் பின்வரும் நற்குணங்களை கொண்டது

புற்றுநோயைத் தடுக்கிறது.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
பருக்களை நீக்குகிறது.
இரவு குருட்டுத்தன்மை மற்றும் உலர் கண்களைத் தடுக்கிறது.
இரத்தத்தில் இன்சுலின் அளவை இயல்பாக்குகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது.
மாரடைப்பை குறைக்கிறது

 விலை என்ன?

விலை என்ன?

சரி இதன் விலை என்ன என்று கேட்கிறீர்களா? இந்த மாங்காவின் ஒரு கிலோ விலை 2.70 லட்சம் ரூபாய் ஆகும். ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள் இந்திய மதிப்பில் ஒரு கிலோ 2.70 லட்சம் ரூபாய். அதாவது ஜப்பான் நாட்டில் இந்திய மதிப்பில் 2.70 லட்சம் ரூபாய். இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான மாங்காய் இதுதான். இந்தியாவில் மிகவும் பணக்கார கஸ்டமர்கள் அதிகமாக இந்த மாங்காய்களை வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

English summary
This is the world's costliest mango: Harsh Goenka shares about a rare mango variety. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே காஸ்டலியான மாங்காய் ஒன்றின் புகைப்படத்தை பிரபல தொழில் அதிபர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்டுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X