சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவில் கோபுரம் பற்றிய பேச்சு.. உரை வீச்சில் தெறித்த சொல்.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவில் கோபுரம் பற்றிய பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்

    சென்னை: இந்துக் கோவில் கோபுரங்களில் அசிங்கமான பொம்மைகள் இருப்பதாக தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான, தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் மகளிர் மாநாடு நடைபெற்றது. அதில் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார்.

    அவ்வாறு திருமாவளவன், உரையாற்றியபோது அயோத்தி விவகாரம் தொடர்பாகவும், பேசினார். அப்போதுதான், இந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பாத்திமா லத்திப் தாயாரின் கதறல் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்குகிறது: சீமான்பாத்திமா லத்திப் தாயாரின் கதறல் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்குகிறது: சீமான்

    வழிபாட்டு தலம் வகைகள்

    வழிபாட்டு தலம் வகைகள்

    திருமாவளவன் பேசுகையில், மத வழிபாட்டுத் தல, கோபுரத்தை வைத்துதான் அது எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத்தலம் என்று அறிந்து கொள்ள முடியுமே தவிர, அடித்தளத்தை வைத்து கிடையாது என்று தெரிவித்தார். அப்போது இந்து கோவில் கோபுரங்களில், அசிங்கமான பொம்மைகள் இருக்கும். இதை வைத்து அது இந்து மத கோவில் கோபுரம் என்று அறிந்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பாஜக கேள்வி

    பாஜக கேள்வி

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்துக்களின் வாக்குகள் வேண்டாம் என்று திருமாவளவன் அறிவிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளது.

    விளக்கம்

    முன்னதாக திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் மகளிர் மாநாட்டில் ஆற்றிய உரையில் ஒரு சில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது போல உள்ளது என்று நண்பர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட சிலர் என்னிடம் கூறினார்.

    உண்மை உண்டு

    உண்மை உண்டு

    அவை, உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும் அதற்காக நான் வருந்துகிறேன். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் பத்து நொடிகள் இடம்பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டி எடுத்து சிலர் பரப்புகின்றனர்.

    பாஜகவுக்கு எதிராக

    பாஜகவுக்கு எதிராக

    எஞ்சிய உரை முழுவதும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல் ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல், இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனிடையே திருமாவளவன் வருத்தம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன் வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Viduthalai Chiruthaigal Katchi Thol.Thirumavalavan extend his regret, over Hindu Temple remark.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X