• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

3-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வால் கல்வியை பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: திருமாவளவன்

|

சென்னை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் 3-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் கல்வியை பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன் கூறியுள்ளார்.

இந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்- க. பொன்முடி

இது தொடர்பாக திருமாவளவன் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் மீது கடந்த 31.7.2019 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது கருத்துக்களை ஒரு மனுவாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் வழங்கினோம். எம்மைப் போலவே பல்வேறு கட்சிகளும் தேசிய கல்வி கொள்கை தொடர்பாகத் தமது கருத்துக்களை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.

புதிய கல்வி கொள்கையின் மும்மொழி திட்டம் என்பது சமஸ்கிருதத் திணிப்பு- அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

மாநில அரசுகள் கருத்து கேட்க வேண்டும்

மாநில அரசுகள் கருத்து கேட்க வேண்டும்

அவை எதையுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தமது வரைவு அறிக்கையில் எந்தத் திருத்தத்தையும் செய்யாமல் மீண்டும் அதே அறிக்கையை இப்பொழுது நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்காமல், மாநில அரசுகளின் கருத்தை அறியாமல் நடைமுறைப்படுத்த முற்படுவது முழுக்க முழுக்க மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயலாகும்.

இந்திய கல்வி நிலை என்ன?

இந்திய கல்வி நிலை என்ன?

உலகில் உள்ள படிப்பறிவற்ற மக்களில் 37% பேர் இந்தியாவில் உள்ளனர் என்று குளோபல் மானிட்டர் ரிப்போர்ட் 2013-14 இல் வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இந்தியாவில் கல்வி புறக்கணிக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. ஏழை-எளிய மக்களும் படிப்பறிவு பெறுவதற்கு 2080 ஆம் ஆண்டு வரை ஆகலாம் என அது சுட்டிக்காட்டியுள்ளது.

3-ம் வகுப்புக்கும் பொது தேர்வு

3-ம் வகுப்புக்கும் பொது தேர்வு

இந்நிலையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த தேசிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் கல்வி வழங்குவது பற்றி எந்தவித குறிப்பான திட்டமும் இல்லை. அது மட்டுமில்லாமல் மூன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்து ஏற்கனவே படிப்பவர்களையும் இடை நிறுத்தம் செய்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி துவக்கக் கல்வியில் (primary) 22.3 %; ஆரம்பக் கல்வியில் ( elementary) 40.8%; உயர்நிலைக் கல்வியில் ( secondary) 50.3% - மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தம் செய்து விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

மும்மொழி கொள்கை

மும்மொழி கொள்கை

இப்படி ஏற்கனவே இடைநிற்றல் சதவீதம் மிக அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக பொதுத் தேர்வுகளை வைப்பது மேலும் இதை அதிகரிக்கவே வழி வகுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மும்மொழிக் கொள்கையை இந்த தேசிய கல்விக் கொள்கை திணிக்கிறது.

இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு

இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு

எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும்மொழிக்கொள்கை என்பது பின்பற்றப்படவில்லை.ஒரு மொழிக் கொள்கை , இருமொழிக் கொள்கை மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பிறர் மீது திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை ஒருகாலும் ஏற்கமாட்டார்கள்.

அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு

அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு

உயர் கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. மருத்துவப் படிப்பைப்போலவே எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டுவருவது பெரும்பாலானவர்களை உயர் கல்வி பெறாமல் தடுப்பதற்குத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சூழ்ச்சியே தவிர வேறு அல்ல.

மாநில அரசு அதிகாரம் பறிப்பு

மாநில அரசு அதிகாரம் பறிப்பு

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் விதமாகவும், கல்வியை காவிமயமாக்கும் நோக்கத்தோடும் கொண்டுவரப்படும் இந்த கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இதுகுறித்து தமிழகத்தின் ஒன்றுபட்ட கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக முதல்வரை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

தினகரன் அறிக்கை

தினகரன் அறிக்கை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்படி விவாதித்து, உரிய திருத்தங்களைச் செய்து செயல்படுத்துவதற்கு பதிலாக, கொரோனா பேரிடர் நேரத்தில் அவசரகதியில் மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல. இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு, அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தேவையானதை மட்டும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
VCK President Thol. Thirumavalavan, AMMK General Secretary TTV Dhinakaran issued a statemnet on Centre's New Education Policy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X