சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதிக்க வெறியர்கள் அடம்...மோடி அரசே நீட் தேர்வை கைவிடு...தொல் திருமாவளவன் பதிவு!!

Google Oneindia Tamil News

சென்னை: மாணவி ஜோதி துர்கா மாய்ந்தார். நீட் கொடுமைக்கு தீர்வே இல்லையா? ஆதிக்க வெறியர்கள் அடம் பிடிப்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா? மோடி அரசே நீட் தேர்வை கைவிடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மாணவி ஜோதி துர்கா மாய்ந்தார். நீட் கொடுமைக்கு தீர்வே இல்லையா?நாட்டை ஆளுவோருக்கு நெஞ்சில் ஈரமே இல்லையா? ஆதிக்க வெறியர்கள் அடம் பிடிப்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா?மோடிஅரசே நீட் தேர்வைக் கைவிடு! மருத்துவக் கல்வி தொடர்பாக மாநில அரசுகளே முடிவு செய்யட்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

Thol Thirumavalavan requests PM Modi to ban NEET Exam

மதுரையைச் சேர்ந்த 19 வயது ஜோதி துர்கா நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் எழுதி வைத்து இருந்த தற்கொலைக்கான கடிதத்தில், ''நீட் தேர்வு மூலம் மருத்துவ சீட் கிடைக்காமல் போவதன் மூலம், எனது குடும்பத்தினரை ஏமாற்ற விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது மொபைல் போனில் ஆடியோவும் பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் மாணவர்கள் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ்

அந்த ஆடியோவில், ''எல்லாருமே என்கிட்ட ரொம்ப எக்ஸ்பர்ட் பண்ணீங்க, எனக்குத்தான் பயமா இருக்கு. ப்ளீஸ் என்னை ப்ளேம் பண்ணாதீங்க, இது நான் எடுத்த முடிவுதான். எனக்கு ரொம்ப ஹேப்பியான ஃபேமிலி கிடைச்சிருக்கு. எனக்குத்தான் அத பாதுகாக்க தெரியல. பை அம்மா.. ஐ அம் கோயிங் டு மிஸ் யு மாம் சாரி'' என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    எனக்கு பயமா இருக்கு... அம்மா, அப்பா ஐயம் சாரி... மனதை உலுக்கும் ஜோதி ஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ!

    இவரது தற்கொலை தமிழகத்தில் மூன்றாவது தற்கொலையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டு இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கோவையைச் சேர்ந்த 19 வயது சுபஸ்ரீ என்ற பெண் தற்கொலை செய்து கொண்டு இருந்தார்.

    English summary
    Thol Thirumavalavan requests PM Modi to ban NEET Exam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X