சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மெட்ரோ ரயில் கட்டடங்கள்.. தூண்களில் போஸ்டர் ஒட்டினால் இனி ஜெயில் தான்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டடங்கள் மற்றும் தூண்களில் போஸ்டர் ஒட்டினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலும் (கோயம்பேடு, அண்ணாசாலை வழிகள்), கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையிலும் மெட்ரோ ரயில் சேவை இரு வழித்தடங்களில் 43 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகிறது.

 Those who advertisement banners in chennai metro walls and buildings will get jail

இந்த ரயில் வழித்தடங்கள் அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் சில இடங்களில் பூமிக்கு அடியில் செல்கிறது.

மற்ற இடங்களில் தரைக்கு மேல் பாலம் அமைக்கப்பட்டு அதில் தான் செல்கிறது. மெட்ரோ ரயில் பாலத்தை பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகளில் தாங்கி நிற்கிறது மெகா சைஸ் தூண்கள். இவற்றின் மீது விளம்பரங்களும் சுவரொட்டிகளும் அதிகமாக ஒட்டப்பட்டு வந்தன. இதனால் தூண்களும் மெட்ரோ ரயில் கட்டடங்களும் விளம்பரங்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி கிடந்தன.

பெயரை எப்படி எழுதுவீர்கள் என்றார்கள்.. கட்சி பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள்: தழுதழுக்கும் தமிழிசைபெயரை எப்படி எழுதுவீர்கள் என்றார்கள்.. கட்சி பதவியை ராஜினாமா செய்ய சொன்னார்கள்: தழுதழுக்கும் தமிழிசை

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மெட்ரோ ரயில் தூண்களில் போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டு சேர்ந்து விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
Those who advertisement banners in metro walls and buildings will get jail : chennai metro warns
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X