சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஞ்சிபுரத்திற்கு பட்டு சேலை வாங்கப் போறீங்களா.. வந்தாச்சு புது ரூல்ஸ்.. அவ்ளோ ஈஸியில்லை இனி!

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வாங்க வருபவர்கள் உரிய ஆவணங்களையும், திருமண பத்திரிக்கை உள்ளிட்ட இதர ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    #TNElection2021 பட்டுப்புடவை வாங்க காஞ்சிக்கு வர்றீங்களா? கல்யாண பத்திரிகை அவசியம்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

    என்னாது.. ரங்கசாமி .. ஏனாம் தொகுதியில் போட்டியிடப் போறாரா.. வீடியோ வைரல்! என்னாது.. ரங்கசாமி .. ஏனாம் தொகுதியில் போட்டியிடப் போறாரா.. வீடியோ வைரல்!

    காஞ்சிபுரம் மாவட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் பணி உத்திரமேரூர் காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 857 வாக்காளர்களும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 433 வாக்காளர்களும் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 633 வாக்காளர்களும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 406 வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 329 வாக்காளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளனர்.

    வாக்குச்சாவடி எண்ணிக்கை

    வாக்குச்சாவடி எண்ணிக்கை

    மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 542 வாக்குச்சாவடி மையங்களும், 1872 வாக்குச்சாவடிகளும் உள்ளது . மேலும் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக சுமார் 8984 நபர்களும், இதர தேர்தல் பணிகளில் சுமார் 2100 நபர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க 21 தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதற்காக தொலைபேசி எண் - 044 27236206, 27236206,27236207,27236208 மற்றும் இலவச அழைப்பு எண் - 1800 425 7087 ஒதுக்கப்பட்டு தேர்தல் தொடர்பாக புகார்களை இந்த எங்களுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    செலவீன குழுக்கள்

    செலவீன குழுக்கள்

    மேலும் தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகளையும், நடைமுறைகளையும் கண்காணிக்க பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, வீடியோ பார்க்கும் குழு, கணக்கு தணிக்கை குழு, உதவி செலவினம் மேற்பார்வையாளர் குழு, செலவு கண்காணிப்பு பிரிவு குழு, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு என 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தயார் நிலையில் காஞ்சிபுரம்

    தயார் நிலையில் காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கும் எண்ணும் மையம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் செயல்படும்.
    பதற்றமான வாக்கு சாவடிகளாக 178 வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தேர்தலுக்கு 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

    காஞ்சி பட்டு சேலை

    காஞ்சி பட்டு சேலை

    பட்டு நகரம் என்று அழைக்கப்படுவது காஞ்சிபுரம். இங்கு பட்டு சேலை வாங்க வருபவர்கள், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பட்டு சேலை வாங்குவதற்காக தாங்கள் கொண்டு வரும் பணத்திற்கு உரிய ஆவணங்களையும், மொத்தமாக சேலை வாங்குவோர், கல்யாண பத்திரிக்கை உள்ளிட்ட இதர ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

    English summary
    The District Collector has directed those who come to Kanchipuram to buy silk sarees to bring the relevant documents and other documents, including the marriage invitation, as the election code of conduct is in force.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X