சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்தவர்கள் ஆயிரம்... சென்றவர்கள் ஆயிரம்... எதற்கும் கலங்காத காங்கிரஸ்

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து மத்திய பிரதேச மாநில முக்கிய தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா வெளியேறி இருப்பது இன்று தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

காரணம் மத்தியபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாக பார்க்கப்பட்டவர், ராகுல்காந்தியுடன் நெருங்கி பழகியவர், இந்த சூழலில் அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறார் என்றால் அது நிச்சயம் ஆய்வு செய்யப்பட வேண்டிய விவகாரமாக தான் கருதவேண்டும்.

ஆனால் சிந்தியாக்களை போல் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காங்கிரஸில் இருந்து வெளியேறியதும், ஆயிரம் பேர் புதிதாக இணைவதும் அரசியலை பொறுத்தவரை சகஜமான ஒரு நிகழ்வாக தான் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தால் மக்கள் சேவையாற்ற முடியாது என நம்புகிறேன்.. சிந்தியா விளக்கம் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தால் மக்கள் சேவையாற்ற முடியாது என நம்புகிறேன்.. சிந்தியா விளக்கம்

நூற்றாண்டு

நூற்றாண்டு

இந்தியாவில் நூற்றாண்டை கடந்து இயங்கி கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அண்மைக்காலமாக சோதனைகள் அதிகமாகி வருகின்றன. கோவா, கர்நாகடா, வரிசையில் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் அணி வகுத்து நிற்கின்றனர். இதனால் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகிறது. விரைவில் சிந்தியா பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மத்திய பிரதேசத்தில் அரியனை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோஷ்டி பூசல்

கோஷ்டி பூசல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து இப்படி முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவது இன்றோ, நேற்றோ நடக்கும் நிகழ்வுகள் அல்ல. காலம் காலமாக இந்த நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் பின்வருவனவற்றை கூறலாம்; புதுச்சேரியில் நாராயணசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரெங்கசாமி பிரிந்து சென்றார். தமிழகத்தில் மூப்பனாரும் பின்னர் அவரது மகன் வாசனும் காங்கிரஸில் இருந்து பிரிந்தனர். ஏன், ப.சிதம்பரம் கூட ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறி சிறிது காலம் தனி அமைப்பு நடத்தினார். நமது அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் எஸ்.எம்.கிருஷ்னா காங்கிரஸில் இருந்து வெளியேறினார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பிரிந்தார், கேரளாவில் கே.எம்.மானி பிரிந்தார், வட கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரும் காங்கிரஸ் தலைவராக திகழ்ந்த சங்மா ஒரு கட்டத்தில் வெளியேறினார்.

கலக்கம்

கலக்கம்

இப்படி பல மாநிலங்களிலும் ஆயிரம் பேர் காங்கிரஸில் இருந்து வெளியேறிய போதும் காங்கிரஸ் கலங்கியது போல் தெரியவில்லை. மாற்றாக மாற்றுத்தலைவர் ஒருவரை உருவாக்கியது. எஸ்.எம். கிருஷ்ணா இல்லை என்பதற்காக கர்நாடகாவில் காங்கிரஸ் இல்லாமல் போகவில்லை, சித்தராமையா என்ற மாற்றுத்தலைவர் உருவாகினார். ரெங்கசாமி இல்லை என்பதற்காக புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இல்லை. இது காங்கிரசுக்கு மட்டுமான உதாரணமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் உதாரணம். ஒருவர் இல்லையென்றால் மற்றொருவர்.. இது தான் அரசியல்.

ஆய்வு

ஆய்வு

ஆனால் அதற்கென்று யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து போகட்டும் என வேடிக்கை பார்ப்பது ஒரு நல்ல தலைமைக்கு ஏற்புடையதாக இருக்காது. ஏனென்றால் இன்றுள்ள அரசியல் காலகட்டம் வேறு, அப்போது இருந்த அரசியல் சூழல் வேறு. இன்னும் பழைய புராணத்தை பாடிக்கொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அது பின்னடைவை தான் தரும். இதனிடையே, மாநிலங்களில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறுவது ஒரு தொடர்கதை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
thousands of peoples came and went from congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X