சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு- தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்- பெண்கள் பெருந்திரளாக பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடபெற்றன. இதில் ஆயிரக்க்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்..

சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு பேரணியில் பெண்கள், குழந்தைகள் பெருந்திரளாக பங்கேற்றனர். கோவையில் 5000க்கும் மேற்பட்ட பெண்கள், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வ.உ.சி. பூங்கா வரை பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Thowheed Jamath hold Anti CAA Rally in Tamil Nadu

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வாசகங்களுடன் பதாகைகள் கையில் ஏந்தியும் 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை பிடித்தபடியும் பேரணியில் பங்கேற்றனர். மேலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் நெல்லையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் சாதிக் தலைமையில் தொடங்கி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது..

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மீண்டும் திமுக கூட்டணி அதிரடி.. மாநிலம் முழுக்க கையெழுத்து இயக்கம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மீண்டும் திமுக கூட்டணி அதிரடி.. மாநிலம் முழுக்க கையெழுத்து இயக்கம்

இந்த பிரமாண்ட பேரணியில் வந்தவர்கள் தேசிய கொடி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வாகாப், திமுக எம்.எல்.ஏ. டி.பி.எம்.மைதீன்கான் ,கடையநல்லூர் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் , காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி ராமசுப்பு , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மீரான் மைதீன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

திருப்பூர், நாமக்கல், கடலூர், வந்தவாசி உள்ளிட்ட பல இடங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

English summary
Thowheed Jamath cadres hold Anti CAA Rally in across Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X