சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. ஆலந்தூரில் தமிமுன் அன்சாரி தலைமையில் மாபெரும் பேரணி

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் தவ்ஹுத் ஜமாத் பேரணி நடைபெறுகிறது. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட திட்டமிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், தமிழகம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது.

சில பகுதிகளில் போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐஐடி, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் பேரணி நடத்தினர்.

ஜனவரி 16-இல் பொங்கல் விடுமுறை ரத்தா?.. என்ன சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்?ஜனவரி 16-இல் பொங்கல் விடுமுறை ரத்தா?.. என்ன சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்?

குடும்பத்தினருடன் பேரணி

குடும்பத்தினருடன் பேரணி

இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் தவ்ஹுத் ஜமாத் அமைப்பினர் பேரணியாக சென்றுள்ளனர். இந்த பேரணியில் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பேரணியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர்.

பேரணி

பேரணி

இந்த பேரணியில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இவர்கள் பேரணியாக கிண்டி சென்று அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டிருந்தனர்.

பேரணியில் எம்எல்ஏ

பேரணியில் எம்எல்ஏ

ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நீளமான தேசியக் கொடி

நீளமான தேசியக் கொடி

இவர்கள் அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேரணிக்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீளமான தேசியக் கொடியுடன் பேரணி சென்று வருகின்றனர்.

English summary
Thowheed Jamath movement conducts rally from Chennai Alandur to Rajbhavan. They protest against Citizenship amendment act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X