சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 30ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த வழங்க காலிஸ்தான் ஆதரவு குழு, எனக் கூறி மிரட்டல் கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஹைகோர்ட், பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். இவர் காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்தவர் என்றும், டெல்லியை சேர்ந்தவர் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Threatening letter from the Khalistan movement group to Chennai High Court

இந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை பதிவாளருக்கும், இந்த கடிதத்தை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பி வைத்துள்ளார்.

மிரட்டல் விடுத்த நபர், தான் ஒரே மாநிலத்தில் இருப்பதில்லை என்றும் பல்வேறு மாநிலங்களைச் சுற்றி வருவதாகவும் தன்னுடைய மொபைல் எண்ணை தொடர்ந்து மாற்றி வருவதாகவும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால், கடிதத்தில், இருக்கக்கூடிய முகவரி மற்றும் தகவல்களை மையமாக வைத்து சென்னை காவல் துறையினர் அடுத்த கட்டமாக, டெல்லி காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

English summary
A threatening letter from the Khalistan-backed group, which is says a bomb blast at the Madras High Court on May 30, has caused panic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X