சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீச்சில் வைத்து.. பெண்களிடம் ஆபாச கேள்விகள்.. மோசமான எடிட்டிங்.. யூடியூபரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

சென்னையில் ஆபாச கேள்விகளை கேட்ட யூடியூப் சேனல்காரர்கள் 3 பேர் கைதானார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பீச்சில், ஆபாசமான, அசிங்கமான கேள்விகளை கேட்டு, அதனை இன்னும் மோசமாகவும், தவறாகவும் எடிட் செய்து பதிவிறக்கம் செய்த யூடியூப் சேனல்காரர்கள் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Recommended Video

    சென்னை: பீச்சில் பெண்களிடம் ஆபாச பேட்டி…‘கம்பி’எண்ணும் யுடியூப் சேனல் குழுவினர்..!

    ஒரு ஸ்மார்ட் போன், ஒரு எடிட்டிங் ஆப் இருந்தால் போதும், யூ டியூப் சேனல் தொடங்கி விடலாம் என்கிற நிலை உள்ளது.. சுவாரஸ்யமான விஷயங்களை தந்துவிட்டால், இல்லத்தரசிகள் முதல் குழந்தைகள் வரை இந்த சேனலுக்கு நேயராகி விடுவார்கள்.

    Three arrested including Youtube channel owner in Chennai

    ஒரு டிவி சேனலை ஆரம்பிக்க வேண்டும் என்றால்தான், அதை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.. ஆனால் யூடியூப் சேனலுக்கு அப்படி இல்லை, அதனால்தான் யார் வேண்டுமானாலும் இதனை ஆரம்பித்து விடுகிறார்கள்..

    ஒரு வீடியோவை எந்த அளவுக்கு வியூவர்ஸ் பார்க்கிறார்களோ, அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.. அதனால், அதிக பணம் மூலதனமோ, அறிவோ, படிப்போ, அனுபவமோ, முதிர்ச்சி பக்குவமோ இதற்கு தேவையில்லை.. ஜஸ்ட் பொழுது போக்கான வீடியோக்களை பதிவிட தெரிந்திருக்க வேண்டும்.. அவ்வளவுதான்..

    நல்ல விஷயங்களை பதிவிடும் போது தானாகவே வியூவர்ஸ் கூடிவிடுவார்கள்.. எனவே இந்த பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் யூடியூப் சேனல் நடத்துபவர்களின் ஒரே குறி.. அவர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காகவே பலர் தரம் தாழ்ந்த வீடியோக்களை பதிவிடுவதை சர்வசாதாரணமாக இப்போது காண முடிகிறது.

    பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவிட்டவர்கள் மீது காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.. அப்படித்தான் இப்போதும் ஒரு யூடியூப் சேனல் சிக்கி உள்ளது.

    சென்னை டாக் என்பது அந்த யூடியூப் சேனல் பெயர்.. "2020 எப்படி போனது" என்று பெசன்ட் நகர் பீச்சில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர்... அதில் ஒரு பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்பவர், அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்தார்.

    விவசாயிகள் டெல்லியில் போராட்ட இடத்தை மாற்றுங்கள்.. உச்சநீதிமன்றம் உத்தரவுவிவசாயிகள் டெல்லியில் போராட்ட இடத்தை மாற்றுங்கள்.. உச்சநீதிமன்றம் உத்தரவு

    இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் ஓனர் தினேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அந்த பெண்ணிடம் ஆபாசமாக இவர்கள் பேட்டி எடுத்ததுடன், அதை தவறாக எடிட் செய்து யூடியூபில் அப்லோடு செய்திருக்கிறார்கள்.. இதைதான் சம்பந்தப்பட்ட பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்... அதிக வியூவர்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை பலர் வெளியிட்டு வரும் வகையில், இந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மற்ற யூட்யூப் சேனல்காரர்களுக்கு ஒரு வார்னிங் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    English summary
    Three arrested including Youtube channel owner in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X