சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்டர் ஸ்டிரோக்.. "இதை" கொடுத்து.. அவரை இழுக்க பாஜக ஸ்கெட்ச்.. வலையில் விழுவாரா!

தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க யோசனை உள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 3 பேரில் ஒருவர்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற தகவல் உள்ளது.. யார் அந்த 3 "வெயிட் பார்ட்டி" என்பதில், மிகுந்த பரபரப்பு பாஜகவில் ஏற்பட்டு வருகிறது.

பாஜவை சேர்ந்த அசோக் கஸ்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார்.. இப்போது அவரது பதவி காலியாக உள்ளது.

அதனை நிரப்புவதற்கான தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையமும் ஏற்கனவே அறிவித்து விட்டது. அதனால், யாரை நிறுத்துவது என்பதில் பாஜக தலைமை தீவிரமாக யோசித்து வருகிறது.

பாஜக

பாஜக

இந்த விவகாரத்தில் ஒரு சிறப்பு மிக்க தகவலும் உள்ளது.. வழக்கமாக அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களே இதற்கு போட்டியிடுவது வழக்கம் என்றாலும், பிற மாநிலத்தவரும் வேட்பாளராக முன்னிறுத்தும் நடைமுறையும் உள்ளது.. அதிலும் கர்நாடகாவில் இப்படி இன்னொரு மாநிலத்தை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுப்பது நடைமுறையில் உள்ள ஒன்றுதான்.

பாஜக தலைமை

பாஜக தலைமை

அந்த வகையில் தற்போது தமிழகத்தின் பெயரும் அங்கு அடிபடுகிறது.. பாஜக தலைமை நினைத்தால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கே இந்த வாய்ப்பை வழங்கலாம்.. ஆனால், அந்த சான்ஸை தமிழகத்துக்கு தர முயற்சிக்கிறது.. இதற்கு சட்டமன்ற தேர்தல் என்ற ஒன்றை தவிர வேறு எந்த காரணமாகவும் இருக்க முடியாது.

சான்ஸ்

சான்ஸ்

மேலும் சமீப காலமாகவே தமிழகத்தில்தான் அக்கட்சியின் கவனம் அதிகரித்து வருகிறது.. மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவருக்கு அந்த சான்ஸை தந்து, அதன்மூலம் இந்த முறையாவது, தாமரையை மலர வைத்தே ஆவது என்ற முடிவிலும் உள்ளதாக தெரிகிறது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அதற்காக மொத்தம் 3 பேரை ஆப்ஷனில் வைத்துள்ளதாம்.. முதல் பெயர் ரஜினிகாந்த்தான்.. அதற்கு காரணம், கர்நாடக மாநிலம் என்பதாலும், இரு மாநில ஆதரவு ரஜினிக்கு உள்ளதாலும், அவரை தேர்ந்தெடுக்க யோசித்து வருகிறதாம்.. இப்படி ஒரு பொறுப்பை ரஜினிக்கு தந்தால், அதை தட்டாமல் ஏற்று கொள்வார் என்றும், அப்படியாவது பாஜக பக்கம் வந்துவிட மாட்டாரோ என்ற ஆசையும்தான் காரணமாம்.

அண்ணாமலை

அண்ணாமலை

அடுத்ததாக லிஸ்ட்டில் உள்ளது அண்ணாமலை.. இவர் கர்நாடக மாநில போலீஸ் துறையில் பிரபலம்.. சீரும் சிறப்புமாக நல்லபடியாக ஐபிஎஸ் அதிகாரியாக வேலை பார்த்து கொண்டிருந்தவர், அதை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துவிட்டார்.

விவசாயிகள்

விவசாயிகள்

மாநில பாஜக துணைத்தலைவராகவும் பொறுப்பு தரப்பட்டுவிட்டது.. அதற்கேற்றார்போல், விவசாயிகளை சந்தித்து பேசுவது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது உள்ளிட்ட பணிகளையும் ஜரூராக செய்து வருகிறார்.. ஆனால், ஏற்கனவே மிக முக்கிய பொறுப்பு தந்துள்ள நிலையில், மறுபடியும் இந்த பொறுப்பு தரப்படுமா என தெரியவில்லை.. ஆனாலும் லிஸ்ட்டில் 2வதாக அண்ணாமலை உள்ளார்.

குஷ்பு

குஷ்பு

மூன்றாவதாக, இருக்கும் பெயர் குஷ்பு.. தமிழுக்கு முன்பு கர்நாடக சினிமாவில்தான் அறிமுகமானார்.. தமிழகம் முழுவதும் உள்ள ஃபேமஸ் முகம் என்பதாலும், வரப்போகும் தேர்தலில் குஷ்புவின் ரோல் மிக முக்கியமான இருக்கும் என்பதாலும் இவரை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்கள்.. இந்த 3 பேருமே விஐபிக்கள்.. 3 பேருமே இரு மாநிலம் அறிந்த நபர்கள்.. 3 பேரில் ரஜினிக்கு மட்டும் இதில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை.. எனினும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர்தான் அந்த வேட்பாளர் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறதாம்.. யார் அந்த லக்கி நபர் என்பது இனிமேல்தான் தெரியும்!

English summary
Three candidates are being considered for the post of Rajya Sabha member
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X