சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எத்தன வசை அங்கே.. மொத்தமாக சேலத்தில் தேமுதிகவை வச்சு செய்த 3 மாஜிக்கள்

பிரேமலதாவுக்கு தேமுதிகவின் மூன்று முக்கிய மாஜிக்கள் பாடம் புகட்டி உள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    lok sabha election results 2019: விஜயகாந்தின் மைத்துனர் எல்கே சுதீஷ் சுமார் தோல்வி முகத்தில் உள்ளார்

    சென்னை: ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சும்மாவா சொன்னாங்க. அளவுக்கு மீறின எதிர்மறை விமர்சனங்களும், வசவு சொற்களும் பல சமயங்களில் பாசிடிவ் ரிசல்ட்டைதான் தந்துவிடுகிறது. இதற்கு உதாரணம்தான் அந்த கால தேமுதிகவில் இருந்து விலகி, இன்று திமுகவில் உயர்ந்துள்ள இந்த மூவரும்!

    கடந்த 2016-ம் ஆண்டின்போது, தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் பயங்கர கடுப்பில் இருந்தனர்.

    எதற்காக மக்கள் நலக்கூட்டணியுடன் இணைய வேண்டும் என்று ஆத்திரப்பட்டு, ஆதங்கத்தில் தவித்து கிடந்தனர். இந்த சமயத்தில்தான் திமுக இவர்களை தன் பக்கம் இழுத்து கொண்டது. கலைஞரின் ராஜதந்திரங்களில் இதுவும் ஒன்று!

    மோடி சுனாமியில் சிக்கிய ஆம் ஆத்மி... ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றி ஆறுதல்!! மோடி சுனாமியில் சிக்கிய ஆம் ஆத்மி... ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றி ஆறுதல்!!

    கட்சி தாவல்

    கட்சி தாவல்

    அதற்கு பதிலாக அந்த தேர்தலில் 3 பேருக்குமே முக்கிய தொகுதிகளை தேர்தலில் ஒதுக்கியும் தந்தது. ஆனால் அவர்கள் 3 பேருமே வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம் என்றாலும், தேமுதிக கரைய தொடங்கியது இந்த கட்சி தாவலின் புள்ளியில் இருந்துதான்.

    வீரபாண்டிய ஆறுமுகம்

    வீரபாண்டிய ஆறுமுகம்

    ஆனால் இவர்கள் 3 பேருமே திமுகவுக்கு விசுவாசமாக இருந்து வருகின்றனர். கட்சி பொறுப்புகளும் வழங்கப்பட்டன. சேலம் என்றாலே திமுகவில் வீரபாண்டிய ஆறுமுகம்தான் நினைவுக்கு வரும். கருணாநிதியின் செல்லபிள்ளையாக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் வீரபாண்டிய ராஜா பெயர் வலம் வர தொடங்கியது. ஆனால் தந்தை அளவுக்கு அவரால் சோபிக்க முடியவில்லை. இதனால்தானோ என்னவோ இந்த முறை விசுவாசியான பார்த்திபனுக்கு சீட் தரப்பட்டது. விசி சந்திரகுமாரை தேர்தல் பொறுப்பாளராக அமர்த்தியது.

    செல்லாக்காசு

    செல்லாக்காசு

    பிரச்சாரத்தின்போதும் சரி, நேரம் கிடைக்கும்போதும் சரி, இவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார் பிரேமலதா. கடுமையாக திட்டினார். இவங்க 3 பேரும் ஒரு செல்லாக்காசாக இருக்கப் போகிறார்கள், இவங்களுக்கு இனி அரசியல் எதிர்காலமே இல்லை, இவர்கள் ஒரு அரசியல் அனாதை என்றெல்லாம் வசை பாடினார். ஆனால் இது எதையுமே இவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எதற்குமே பதில் சொல்லவும் இல்லை. அமைதியாக தேர்தல் வேலைகளை கவனித்தார்கள். தீவிர வெற்றிக்காக போராடினார்கள்.

    அரசியல் அனாதை

    அரசியல் அனாதை

    ஆனால் இப்போதோ சேலத்தில் பார்த்திபன் 5,69,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஒரு லட்சத்து 47 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தக்க வைத்துள்ளார். அதாவது பார்த்திபன் எம்பியாக டெல்லி போக போகிறார். யாரை அரசியல் அனாதை என்று பிரேலதா விமர்சித்தாரோ, அவர்கள் கடுமையான உழைப்பால் மேலே சென்று கொண்டிருக்கிறார்கள். இன்று அரசியல் அனாதை யார் என்பதை தேமுதிகதான் முடிவு செய்து கொள்ள வேண்டும்!

    English summary
    DMK Candidate SR Parthiban won in Salem Constituency and he taught lesson to DMDK Premalatha
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X