சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 மணி நேரத்தில் நடந்த களேபரம்.. மநீம - திமுக கூட்டணி வைரல்.. உண்மையில் என்னதான் நடந்தது?

மக்கள் நீதி மய்யம், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேர போவதாக நேற்று வந்த தகவல்கள் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வதந்திகளை நம்பாதீர்: கமல்ஹாசன் ட்வீட்

    சென்னை: மக்கள் நீதி மய்யம் , திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேர போவதாக நேற்று வந்த தகவல்கள் பெரிய வைரலாகி உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக செய்தியகள் உறுதியாகி உள்ளது. இதற்காக கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதை கூட நிறுத்த போவதாக அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அவர் திமுக காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க போவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    என்ன செய்தி

    என்ன செய்தி

    நேற்று மாலை நான்கு மணிக்குத்தான் அந்த செய்தி வெளியானது. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேர போகிறது. இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும். மக்கள் நீதி மய்யத்திற்கு நாடளுமன்ற தேர்தலில் 2 இடங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

    கமலுக்கு அழைப்பு

    கமலுக்கு அழைப்பு

    இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளது. அகில இந்திய கட்சித் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இதில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக ஸ்டாலின் ஏற்கனவே அவருக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகள் அமைக்க போகும் கூட்டணி குறித்து விவாதம் செய்வதற்கான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுலும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார். நாடாளுமன்ற கூட்டணி குறித்து இதில் விவாதிக்க வாய்ப்புள்ளது.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    இதில் திமுகவின் தோழமை கட்சி இல்லாமல் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள போவதாக கூறப்பட்ட கட்சித்தலைவர் கமல்ஹாசன் மட்டுமே (ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை). இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கமல்ஹாசனும் கலந்து கொள்ள போகிறார் என்று தகவல்கள் வந்தது. அதனால் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் இணைவார் என்றும் கூறினார்கள்.

    இணையம் முழுக்க வைரல் ஆனது

    இணையம் முழுக்க வைரல் ஆனது

    இந்த செய்தி வந்த அடுத்த 10 நிமிடத்தில் இணையம் முழுக்க வைரல் ஆனது. இணையம் முழுக்க எல்லோரும் இது குறித்து பேச தொடங்கினார்கள். சிலர் கமல்ஹாசன் செய்வது சரிதான் என்றும், சிலர் தவறு என்றும் கூறி விவாதம் செய்தனர். இது இணையத்தில் திடீரென்று டிரெண்ட் அடித்தது.

    முற்றிலுமாக மறுப்பு

    முற்றிலுமாக மறுப்பு

    அதன்பின் மூன்று மணி நேரத்தில் சரியாக 7 மணி வாக்கில் கமல்ஹாசன் இந்த செய்தியை மொத்தமாக மறுத்தார். அப்படி கூட்டணி வைக்கும் எண்ணமில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் இன்று திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Truth Behind the DMK - Makkal Needhi Maiam alliance news; What actually happened yesterday!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X