சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய எண்ணங்களை எரிப்போம்.. போகிக்காக த்ரி ரோஸஸ் வெளியிட்ட விளம்பரம்.. இணையத்தில் வைரல்!

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கலை முன்னிட்டு த்ரி ரோஸஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் விளம்பரம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

எப்போதும் பண்டிகை காலங்களை முன்னிட்டு முக்கிய நிறுவனங்கள் சிறப்பு விளம்பரம் வெளியிடும். தீபாவளி,கிறிஸ்துமஸ், ரமலான் என்று பல விழாக்களுக்கு சிறப்பு விளம்பரங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் த்ரி ரோஸஸ் போகி மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெண் ஒருவர் ஜாதி மறுப்பு திருமணம் குறித்து பேசியுள்ளார். இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பிப்ரவரி முதல் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு... கிராமங்கள் வாரியாக பயண ரூட் ரெடிபிப்ரவரி முதல் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு... கிராமங்கள் வாரியாக பயண ரூட் ரெடி

ஜாதி திருமணம்

ஜாதி திருமணம்

அந்த விளம்பரத்தில், ஜாதி மாறி திருமணம் செய்து கொள்ள அந்த பெண் தனது தந்தையிடம் அனுமதி கேட்பார். ஆனால் அவரோ அனுமதி வழங்காமல், ஒரே ஜாதி திருமணம் குறித்து பேசுவார். அப்போது த்ரி ரோஸஸ் டீயை அவரிடம் கொடுத்துவிட்டு, பின் அவரின் மனதை மகள் மாற்றுவார். இதுதான் விளம்பரத்தின் சாராம்சம். கடைசியில் போகியின் போது பழைய எண்ணங்களை கொளுத்துவோம் என்று அந்த வீடியோ முடியும். இதுதான் தற்போது வைரலாகி உள்ளது.

நல்ல பாராட்டு

நல்ல பாராட்டு

இதை பலரும் பாராட்ட தொடங்கி உள்ளனர்.ஜாதிக்கு எதிராக இவர்கள் இப்படி விளம்பரம் வைத்து இருப்பது சிறப்பு. போகியை வைத்து நல்ல கான்செப்ட் உருவாக்கி உள்ளனர் என்று பலரும் பாராட்டி உள்ளனர்.

செம

திரி ரோசஸ் டீ தூள் விளம்பரத்தை கவனிப்பவர்களுக்கு ஒரு செய்தி புலப்படும். சமூகத்தை நவீன சிந்தனைகளை நோக்கி நகர்த்தும் வண்ணமே அதன் விளம்பரம் இருக்கிறது. நுகர்வோரின் பொதுபுத்தியை சந்தைபடுத்தும் போட்டி உலகில் , திரி ரோசஸ் விளம்பரம் தனித்துவமானது. பாராட்டுக்கள், என்று இவர் பாராட்டி உள்ளார்.

என்ன அருமை

அருமையா செஞ்சுருக்காங்க 🖤♥️ இனி வீட்ல 3 ரோசஸ் டீ தான், என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
New Three roses ad before Bhogi festival goes viral in Socila Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X