சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனியார் பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளால்... மாணவர்களின் கண் பார்வை பாதிப்பு... பெற்றோர் கவலை

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு எதிரொலியாக தனியார் பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பார்வை பாதிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் ஸ்கீரின்களை பார்த்து மாணவர்கள் பாடம் கற்பதை விட கண் பிரச்சனைகள் ஏற்படுவது தான் அதிகரித்துள்ளது.

தனியார் பள்ளிகள் இதனை அட்வான்ஸ் டெக்னாலஜி என பெருமைப் பட்டுக்கொள்ளும் நிலையில், பெற்றோர்கள் இதனால் கவலையுடன் பார்க்கிறார்கள்.

மும்பையில் மருந்து நிறுவனத்தில் கேஸ் கசிவு..செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம்.. மக்கள் அச்சம்மும்பையில் மருந்து நிறுவனத்தில் கேஸ் கசிவு..செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம்.. மக்கள் அச்சம்

பள்ளிகள்

பள்ளிகள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இப்போது அதில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. பள்ளிகள் திறக்க குறைந்தது இன்னும் 2 மாத காலமாவது ஆகக்கூடும் எனத் தெரிகிறது. இந்நிலையில் அதுவரை காத்திருப்பது ஏன் என எண்ணிய சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிவிட்டன.

வெப் கேமிரா

வெப் கேமிரா

அந்த வகையில் நாளொன்றுக்கு 2 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இதை கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் வழியாக கவனிக்கும் மாணவர்களுக்கு, கண் எரிச்சல், கண் சிவப்பு, கண் அரிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் ஸ்கீரின்களை முகத்திற்கு அருகில் வைத்து மாணவர்கள் பாடம் கற்பது தான். அப்போது தான் முகம் வெப் கேமிராவில் பதிவாகும்.

மனதிற்குள் தவிப்பு

மனதிற்குள் தவிப்பு

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துள்ள பெற்றோர் ஆன்லைன் வகுப்புகளால் ஒரு வித கவலைக்கு ஆளாகியுள்ளனர். சிறு வயதிலேயே தங்கள் பிள்ளைகள் கண்ணாடி அணிய வேண்டிய நிலை வந்துவிடுமோ என பெரும்பாலான பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய சரவணன் என்பவர், ''பிள்ளைகள் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடும் போது கண் பிரச்சனை ஏற்படும் என கண்டிப்போம். இப்போது அந்த பிரச்சனை ஆன்லைன் வகுப்புகளால் வந்துவிடுமோ என என்னை போன்ற பல பெற்றோருக்கும் அச்சமாக இருக்கிறது'' எனக் கூறினார்.

கிராமப்புற மாணவர்கள்

கிராமப்புற மாணவர்கள்

இதனிடையே ஆன்லைன் வகுப்புகளுக்காக புதிய ஸ்மார்ட் போன்களும், கம்ப்யூட்டர்களும் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் பெற்றோர்கள். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், தனியார் பள்ளிகளில் பள்ளிக்கட்டணங்கள் வசூலிக்க ஆன்லைன் வகுப்புகளை காரணமாக கூறுவது தான்.

English summary
Through online classes, students are affected by eye sight
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X