சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவினரை கேவலமாக சித்தரிக்கும் துக்ளக் கார்ட்டூன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

துக்ளக் பத்திரிகையில் அதிமுகவை சாடி கார்ட்டூன் போடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக-வை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலிஆடு!

    சென்னை: "எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்கப்பா" என்று அதிமுகவைதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் இருக்கிறது குருமூர்த்தியின் ஒவ்வொரு கருத்துக்களும்!

    அரசியல் வல்லுநர்கள் என்ற பெயரில் சிலர் இருப்பார்கள். எதையாவது குட்டையை குழப்பி, ஏதாவது வில்லங்கத்தை அதில் கலந்து, விஷமத்தை கொப்பளிக்க வைப்பதுதான் இவர்களது வேலையே!

    இப்படித்தான் சுப்பிரமணியசாமி செய்தார்.. எச்.ராஜா அதை தொடர்கிறார்.. இப்போது துக்ளக்கின் வேலை. எதையாவது ஒன்றை சொல்லி, அதன்மூலம் சர்ச்சையோ, பிரச்சனையோ ஆகிவிட்டால் அப்படியே பிளேட்டை திருப்பி போட்டு பேக் அடிப்பதுதான் இவர்களது இயல்பே!

    தமிழிசையின் நீட் தற்கொலை தொடர்பான ட்வீட்- கோபத்தை மொத்தமாக காட்டிய நெட்டிசன்கள்! தமிழிசையின் நீட் தற்கொலை தொடர்பான ட்வீட்- கோபத்தை மொத்தமாக காட்டிய நெட்டிசன்கள்!

    நெருக்கம்

    நெருக்கம்

    துக்ளக் பத்திரிகையின் வேலை மட்டும் பார்க்காமல், அடிக்கடி பாஜகவை தூக்கி வைக்கும் வேலையையும் சேர்த்து பார்ப்பார் அதன் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி. அப்படி ஒரு காரியம்தான், பாஜக-அதிமுக கூட்டணி முயற்சி. இதில் இவரது பங்கு ஓரளவுதான் என்றாலும், பாஜகவிடம் உள்ள நெருக்கம் இவரை அதிமுக தூக்கி உயரத்தில் வைத்து கொண்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிமுகவை போட்டுத் தாக்குவது குருமூர்த்தியின் ஸ்டைல்.

    தோல்வி

    தோல்வி

    தேர்தல் வரை குருமூர்த்தி சொல்லுக்கு அப்படி ஒரு மரியாதை தந்தது அதிமுக. ஆனால் இவ்வளவு காலம் இல்லை என்றாலும், 2 நாளைக்கு முன்னாடியாவது குருமூர்த்தி போட்ட ட்வீட் வைத்து, அவரை பற்றி ஓரளவாவது அதிமுக உணர்ந்திருக்க வேண்டும். "அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது எனவும் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் 5 தொகுதிகளில் தோல்வி கண்டுள்ளது" என்றார்.

    ரவீந்திரநாத்

    ரவீந்திரநாத்

    இதோ.. இப்போதும் அதிமுகவை கீழே காலால் போட்டு மிதிக்கும்படி ஒரு கார்ட்டூன் துக்ளக் பத்திரிகையில் வரையப்பட்டுள்ளது. அதாவது ஒரு வீட்டில் விருந்து நடக்கிறது. அதில் வரும் கேரக்டர்கள் - பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீட்டுக்கு வெளியே ஓ.பன்னீர்செல்வமும், புதிய எம்பியாகி உள்ள அவரது மகன் ரவீந்திரநாத்தும் அவர்கள் சாப்பிடுவதை நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். மகன் வாயில் எச்சில் ஒழுகுகிறது.

    மீந்துச்சுன்னா..

    மீந்துச்சுன்னா..

    அதற்கு ஓபிஎஸ் மகனை தேற்றுகிறார், "உஸ்ஸ்.. யாரும் அழப்படாது. நம்பளையெல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்"என்று தேற்றுகிறார். இதுதான் அந்த கார்டூன். அதாவது அதிமுகவை பிச்சைக்காரர்கள் ரேஞ்சுக்கு சித்தரித்துள்ளது துக்ளக். மற்றவர்கள் சாப்பிட்டு மீந்து போனதை பெற்று கொள்வதற்கு பெயர் என்ன? பெற்றுக் கொள்பவர்களுக்கு பெயர்தான் என்ன?

    தேவையா?

    தேவையா?

    காலத்தின் கோலம்.. தேடி தேடி கூட்டணி வைக்க வந்தால், விலகி விலகி ஓடியிருக்கலாமே? அதைவிட்டுவிட்டு, யாருக்குமே பிடிக்காத ஒரு கூட்டணியை வைத்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் அதிருப்தியை பெற்று, வெறுப்பு ஓட்டுக்களை சம்பாதித்து.. கடைசியில் இப்படி ஒரு ரேஞ்சுக்கு வந்து கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்வதை போல ஆகிவிட்டதே... இதெல்லாம் அதிமுகவுக்கு தேவைதானா என்று கேட்பதா? அல்லது, தேவைதான் என்று சொல்வதா தெரியவில்லை.

    English summary
    In Thuglak Magazine criticized badly AIADMK Party and Seat demanding issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X