சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துதான் காணப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சேலம், ஈரோடு, மதுரை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து மக்கள் சற்று இளைப்பாறினர். ஆனால் சென்னையில் மட்டும் இதுவரை கோடை மழை தனது கணக்கை தொடங்கவில்லை.

மோடி அலையா? சுனாமியா?... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம் மோடி அலையா? சுனாமியா?... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம்

காற்றழுத்த தாழ்வு நிலை

காற்றழுத்த தாழ்வு நிலை

இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெற்கு உள் கர்நாடகத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை கொட்டும்

கனமழை கொட்டும்

இதன் காரணமாக நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை, நாளை மறுநாள்

நாளை, நாளை மறுநாள்

இதேபோல் திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெளியே செல்ல வேண்டாம்

வெளியே செல்ல வேண்டாம்

தமிழகத்தில் வடக்கு, மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 11 முதல் மாலை 4 மணி வரை மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அனல் காற்று வீசும்

அனல் காற்று வீசும்

வெயில் அதிகரிக்கும் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தெற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Chennai Meteorological center has said Thunderstorm and heavy rain will be there in Tamilnadu for next two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X