சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர் மிசா ஸ்டாலின்தான்.. அது எனக்கே தெரியும்.. ஒரே போடாக போட்டார் குருமூர்த்தி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே போடாக போட்டார் குருமூர்த்தி - பிரச்சனை Over | thuqlak gurumurthy confirms 'he is misa stalin'

    சென்னை: "ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மைதான். அது எனக்கே தெரியும். அவர் மிசா ஸ்டாலின் தான்" என்று துக்ளக்கின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    எந்த காலத்திலேயோ நடந்த ஒரு விவகாரத்தை, காலம் கடந்தாலும் அதை இப்போது எடுத்து வைத்து கொண்டு பேசுவதும், அதையே சர்ச்சையாக்கி கொள்வதும், அதற்கு நாலு பேர் விளக்கம் தருவதும், அந்த விளக்கத்திற்கு பதில் தரப்பு மறுப்பு சொல்வதும், கண்டனம் சொல்வதும்.. கட்சி பாகுபாடு இன்றி நடந்து வரும் சமாச்சாரம் ஆகும். அது திருவள்ளுவர் ஆனாலும் சரி, பெரியார் ஆனாலும் சரி.. இவர்களும் விதிவிலக்கல்ல.

    நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள்.. மக்கள் அவற்றில் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் டைம் வேஸ்ட் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்தும் யாருமே அதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.. அவர்களது கவனம் எல்லாம் அதில் மட்டுமே.

    பாத்திமாவுக்கு என்னதான் நடந்தது.. செல்போனை ஆன் செய்தவுடன் வந்த மெசேஜ்.. நிஜம் வெளியே வருமா?பாத்திமாவுக்கு என்னதான் நடந்தது.. செல்போனை ஆன் செய்தவுடன் வந்த மெசேஜ்.. நிஜம் வெளியே வருமா?

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    இப்போது அப்படி ஒரு விஷயம் திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்ட விவகாரம். இதை ஆரம்பித்து வைத்ததே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்தான். "1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது தவறான செய்கைகளுக்காகதான்" என்று சொல்லவும், இது மிகப்பெரிய வாதத்தை கிளப்பியது.

    ஆதாரம் எங்கே?

    ஆதாரம் எங்கே?

    "மு.க. ஸ்டாலின் ஒரு மிசா கைதி அல்ல, ஆதாரங்கள் எதுவும் முறையா இல்லையே.. நெஞ்சுக்கு நீதி, ஸ்டாலினின் பயணக்குறிப்புகள் நூல்களில்தான் ஆதாரம் இருக்கிறது, அதனால் ஆதாரத்தை காட்டுங்கள்" என்று ஒரு தரப்பும், சோஷியல் மீடியாவில் இதனை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிடுவது என இன்னொரு தரப்பும்.. முடிவில்லாமல் இந்த விவகாரம் போய்கொண்டிருக்கிறது.

    முரசொலி மாறன்

    முரசொலி மாறன்

    இந்த நிலையில், துக்ளக் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி ஒரு கருத்து தெரிவித்துள்ளார். "ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மை. அது எனக்கே தெரியும். நெருக்கடி நிலை முடிந்து, அதன் பிறகு நடந்த 1977ஆம் ஆண்டு தேர்தலில், அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்காக நான் பிரச்சாரம் கூட செய்திருக்கிறேன். அவர் மிசா ஸ்டாலின் தான்" என்று தெரிவித்துள்ளார்.

    தீர்வு

    தீர்வு

    திமுகவுக்கு ஆதரவாக சொன்னது குருமூர்த்திதானா? பரவாயில்லையே என்கிறார்கள் பலர்... "திமுக தலைவர் கைதான செய்தியைகூட ஆதாரத்துடன் சொல்ல குருமூர்த்திதான் தேவைப்படுகிறார்" என்று கலாய்க்கிறார்கள் மற்றும் சிலர். எது எப்படியோ, இத்தனை நாள் நிலவி வந்த ஒரு குழப்பத்துக்கு குருமூர்த்தியே ஒரு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்துவிட்டார்!

    இனிமேலாவது அடுத்த வேலையை பார்ப்பாங்களா!

    English summary
    thuqlak gurumurthy confirms that, dmk leader mk stalin was arrested under misa act, "he is misa stalin"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X