சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாவளிக்கு முதல் நாள் பஸ்ஸில் ஊருக்கு போக திட்டமா.. அப்ப இந்த விஷயம் உங்களுக்குத்தான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: தீபாவளி ரெயில் டிக்கெட்...! தொடங்கிய சில நிமிடத்தில் முடிந்த முன் பதிவு! பயணிகள் ஏமாற்றம்...

    சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான டிக்கெட் முன் பதிவு அரசு போக்குவரத்துக் கழக இணைய தளம் மற்றும் இரண்டு தனியார் இணையதளங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    முன்பெல்லாம் தீபாவளி பண்டிகை என்றதும் கோயம்பேடு பேருந்துநிலையத்திலும், சென்னையில் ரயில்வே ஸ்டேசன்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து புக்கிங் செய்வார்கள். இப்போது அப்படி அல்ல.. எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்டது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவு நடந்து வருகிறது. ஆனால் கூட்டம் தான் சுத்தமாக இல்லை. எல்லோரும் ஆன்லைனிலேயே புக்கிங் செய்து வருகிறார்கள்.

    பாக்.கை கடைசியில் டுவிட்டரும் கைவிட்டுடுச்சு.. பாகிஸ்தான் அதிபருக்கு டுவிட்டர் அளித்த ஷாக்பாக்.கை கடைசியில் டுவிட்டரும் கைவிட்டுடுச்சு.. பாகிஸ்தான் அதிபருக்கு டுவிட்டர் அளித்த ஷாக்

    டிக்கெட் புக்கிங்

    டிக்கெட் புக்கிங்

    வரும் அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போக்குவரத்து நடைமுறைகளின் படி அறுபது நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் அக்டோபர் 25-ஆம் தேதி பயணம் செய்பவர்களுக்கு முன் பதிவு நேற்று நடந்தது .

    நாளை மறுநாள் ரிட்டன் புக்கிங்

    நாளை மறுநாள் ரிட்டன் புக்கிங்

    அக்டோபர் 26 ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது. இதேபோல் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு மீண்டும் திரும்புவதற்கான முன்பதிவு நாளை மற்றும் நாளை மறு நாளில் இருந்து துவங்குகிறது.

    2 தனியார் இணையதளங்கள்

    2 தனியார் இணையதளங்கள்

    அரசு பேருந்துக்கான முன்பதிவு tnstc.in என்ற அரசு போக்குவரத்துக் கழக இணைய தளம் மற்றும் இரு தனியார் இணையதளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    ஆம்னி பேருந்து புக்கிங்

    ஆம்னி பேருந்து புக்கிங்

    பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் புக்கிங் என்பது ஒரு மாதத்திற்கு முன்பு என்ற விதிப்படி செய்யப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் தான் தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும்.

    English summary
    setc diwali special buses online booking chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X