சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது எழுத்து யுத்தம்.. இனி சண்டை செஞ்சே ஆகணும்.. சோசியல் மீடியாவில் திமுக-பாஜக மோதல் பகீர் பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக திமுக மற்றும் பாஜகவினரிடையே மோதல் அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் பொருளாதார விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளில் கருத்து எதிர்கருத்து என மாறி மாறி மோதுகிறார்கள். இதனை அதிமுகவினர் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

முன்பெல்லாம் ஆளும் எதிர் கட்சியினரிடையே கருத்து யுத்தம் என்பது மேடைகளில் தான் இருக்கும். வீதிக்கு வீதி பொதுமக்ககளை கூட்டி ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ தங்கள் எதிர் தரப்பு மீது விமர்சனங்களை முன்வைப்பார்கள்.

இப்போது அப்படியில்லை, எல்லாமே சமூக வலைதளங்களில் தான் நடக்கிறது. தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளங்களையும் இணையதளங்களையும் அன்றாடம் பார்த்து வருகிறார்கள். இதனால் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு, ஆளும் மற்றும் எதிர் தரப்புகள் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளன.

பதில் கொடுத்த ஆகணும்

பதில் கொடுத்த ஆகணும்

இதற்கு காரணம் இருக்கின்றன, ஏனெனில் சம்பந்தப்பட்ட கட்சியின் ஏதேனும் அரசியல் நகர்வுகளை மக்களுக்கு எதிராக எதிர்தரப்பு திருப்பி வருகிறது. இதற்கு பதிலடியாக அந்த தரப்பும் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

இப்படித்தான் சமூக வலைதளங்களில் திமுகவும் பாஜகவும் கடுமையாக மோதிக்கொண்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் திமுகவை பாஜகவும், பொருளாதார மந்த நிலை விவகாரத்தில் பாஜகவை திமுகவினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் கருத்து சுதந்திர விவகாரத்திற்காக நேற்று திமுக பாஜகவினரின் சண்டை டுவிட்டரில் பயங்கரமாக நடந்தது. ஒருவரை மாற்றி ஒருவர் உலக லெவல் டிரெண்டிங் செய்து நடத்தினார்கள்.

திமுகவும் பதில் தாக்குதல்

திமுகவும் பதில் தாக்குதல்

இந்த கருத்து யுத்தம் பெரிய அளவில் மாறிக்கொண்டிருப்பது அண்மைக் காலமாகத்தான். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், பாஜகவினர் தமிழகத்தில் தங்களுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதேபோல் திமுகவினரும் பாஜகவினருக்கு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த போராட்டங்களை அதிமுக அமைதியாக கண்காணித்து வருகிறது. தங்களுக்கு எதிராக திரும்பு போது மட்டும் அதிமுக கடும் எதிர்வினையை காட்டுகிறது.

எதிர்வினை ஆற்ற வேண்டும்

எதிர்வினை ஆற்ற வேண்டும்

இங்கு சண்டையில ஜெயிக்கிறோமோ.. தோற்கிறோமோ சண்டை செஞ்சே ஆகணும்.. வேண்டாம் என்றெல்லாம் ஒதுங்கிவிட முடியாது. காரணம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதால் இதை தடுக்க இனி யாராலும் முடியாது. முன்பு வீதியில் நடந்தது. இப்போது சமூக வலைதளத்தில் நடக்கிறது. மக்களிடம் தங்கள் கருத்தே, தங்கள் செயலே சரி என ஒவ்வொரு கட்சியும் எதிர்வினை இனி ஆற்ற வேண்டிய கட்டாயத்தை சமூக வலைதளங்கள் உருவாக்கிவிட்டன. எல்லாத்துக்கும் மக்களின் வாக்குதான் காரணம் ! அவங்கதான் யார் ஆள வேண்டும் என்பதை இங்கு தீர்மானிக்கிறார்கள்.. !

English summary
tight clashes between dmk and bjp on social media from last one month
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X