சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஐயா மோடி அவர்களே.. நான் சொல்றேன் கேளுங்க.. முடியலங்க.. மனசு சரியில்லாம போச்சு".. ஜிபி முத்து கதறல்

பிரதமருக்கு ஜிபி முத்து கண்ணீர் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.. இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு.. என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒன்னுமே சரியல்லை பார்த்துக்கிடுங்க" என்று டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஸ்டிரைட்டாக பிரதமருக்கே கோரிக்கை விடுத்து ஒரு கண்ணீர் வீடியோ போட்டுள்ளார்.

Recommended Video

    TikTok மீண்டும் Open பன்னுங்க.. ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ

    டிக்டாக் சேவை தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.. இதனால் இந்த டிக்டாக்கின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானவர்கள் ஏராளமானோர்.. இதில், ஆட்டம், பாட்டம், துக்கம், சந்தோஷம், தற்கொலை முயற்சி வரை சென்று மீண்டு வந்தவர்கள் இன்னும் ஏராளம்!

    tik tok ban: gp muthu demands pm modi, and has released video

    அதேபோல, டிக்டாக் மட்டும் இல்லையென்றால், இவர்கள் எல்லாம் இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருப்பார்களா என்றும் தெரியாது.. இவர்களுக்கு வாழ்க்கை தந்ததே இந்த டிக்டாக்தான்... ராத்திரி, பகல் என்று டிக்டாக்கே கதி என்று விழுந்து கொண்டிருந்தவர்கள் இனி என்ன செய்வார்கள்? என்ற அடுத்த கேள்வி எழுந்து வருகிறது..

    இதை பற்றி ரவுடி பேபி சூர்யாகருத்து சொல்லும்போது, "நம்ம நாட்டுக்காக தடை பண்ண டிக்டாக்கால் தனக்கு மகிழ்ச்சிதான்" என்று கூறியிருந்தார். அந்த வகையில், எளிய, யதார்த்த பேச்சால் மக்களை ஈர்த்தவர் ஜிபி முத்து. இவரை பொறுத்தவரை, தன்னுடைய மரக்கடை பிசினஸே இவருக்கு 2வதுதான்.. . முதலில் டிக்டாக்.. அந்த டிக்டாக்கும் மரக்கடையில் வைத்துதான் செய்வார்.. சாப்பிடுவது, தூங்குவது என ஒவ்வொரு விஷயத்தையும் டிக்டாக் போட்டு வந்த இவர் தற்போது சோகமே வடிவாக காணப்படுகிறார்.

    இப்போது டிக்டாக் தடை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் பிரதமருக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "இந்த பதிவு யாருக்குன்னா, இந்திய நாட்டின் பிரதமர் ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.. இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு..

    என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. ஒன்னுமே சரியல்லை பார்த்துக்கிடுங்க.. ஐயா மோடி அவர்களே தாழ்மையா கேட்டுக்கறேன்" என்று சோகத்துடன் புலம்பி உள்ளர் ஜிபி முத்து.

    4 நாட்கள் கூட இவர்களால் டிக்டாக் இல்லாமல் இருக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.. ஒரு சீன கம்பெனி எந்த அளவுக்கு நம்மை ஆக்கிரமித்து அடிபணிய வைத்துள்ளது என்பது அதைவிட ஆச்சரியமாக உள்ளது.. டிக்டாக் வேண்டும் என்று இப்போதுதான் ஜிபி முத்து பிள்ளையார் சுழி போட்டிருக்கார்.. இனி யாரெல்லாம் வரிசையாக வந்து கோரிக்கை வைக்க போகிறார்களோ, தெரியவில்லை.. பார்ப்போம்!

    English summary
    tik tok ban: gp muthu demands pm modi, and has released video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X