சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபி திருவிழாவில் ஆடுவார்.. எனக்கும் ஆசை.. கணவருக்கு பிடிக்கலை.. அங்க ஆரம்பிச்சது.. டிக்டாக் வினிதா

டிக் டாக் புகழ் வினிதா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    டிக்டாக் தோழியின் பெயரை கெடுத்த கணவன்.. மனைவி ஆவேசம்-வீடியோ

    சென்னை: "திருவிழாக்களில் டான்ஸ் ஆடுபவர் அபி.. எனக்கும் அப்படி டான்ஸ் ஆடணும்னு ஆசை.. ஆனா முடியல.. எங்களுக்குள் நட்பு அதிகமானது. இதுதான் என் கணவருக்கு பிடிக்கவில்லை" என்று டிக்டாக் வினிதா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்

    தேவகோட்டையைச் சேர்ந்தவர் வினிதா. இவருக்கும் ஆரோக்கிய லியோவுக்கும் போன ஜனவரி மாதம் கல்யாணம் நடந்தது. சிவகங்கையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், ஆரோக்கிய லியோ சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

    பொழுதை கழிக்க நினைத்த வினிதா டிக்டாக் ஆப்பில் நுழையவும், திருவாரூரை சேர்ந்த அபியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அபியின் பெயரை தன் கையில் பச்சை குத்தும் அளவுக்கு இரு தோழிகளும் நெருக்கமாகி உள்ளனர்.

    எண்ணையை தடவி உருண்டாலும் ஒட்டுற மண்தானே ஒட்டும்.. ஜாதி அரசியலை கையில் எடுக்கிறதா பாஜக?எண்ணையை தடவி உருண்டாலும் ஒட்டுற மண்தானே ஒட்டும்.. ஜாதி அரசியலை கையில் எடுக்கிறதா பாஜக?

    லியோ

    லியோ

    இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, லியோ வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். மனைவியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்ததாகவும், இதனால் வினிதாவின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அபியுடன் "நெருக்கமான" போட்டோக்களை கண்டு கணவர் அதிர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

    ஓட்டம்

    ஓட்டம்

    உடனே மனைவியை மாமியார் வீட்டில் கொண்டு போய்விட்டு, இனி அபியுடன் சேரக்கூடாது என்று எச்சரித்தும், வினிதா வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு அபியுடன் ஓடிவிட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அபியுடன் ஓடிப்போனதாக சொல்லப்பட்ட வினிதா சிவகங்கை ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    மேலும், "திடீரென்று சிங்கப்பூரில் இருந்து வந்த கணவர், தன்னுடன் சண்டை போட்டு, சரமாரியாக தாக்கியதாகவும், அதனால்தான் வீட்டை விட்டு வெளியேறினேன்" என்றும் சொல்லி 2 வீடியோக்களை வெளியிட்டிருந்தார். தன் தோழியை பற்றி தப்பாக பேசிய கணவரும், தன் அம்மாவும் மீடியா முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் வினிதா கோரிக்கை விடுத்திருந்தார்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இந்நிலையில், தேவக்கோட்டை மகளிர் போலீசில் வினிதாவை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் சுருக்கம்தான் இது: "டிக்-டாக் ஆப் மூலமாதான் எனக்கு அபியை தெரியும். கொஞ்ச நாளிலேயே நெருங்கி பழகினோம். திருவிழாக்களில் நடக்கும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுபவர்தான் அபி.

    டான்ஸ் ஆடுவார்

    டான்ஸ் ஆடுவார்

    இப்படி அபி ஆடிய டான்ஸ் எல்லாம் டிக்-டாக்கில் இருந்தது. அதை பார்த்ததும், எனக்கும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதனால் ஒருமுறை என் கணவரை அழைத்துக் கொண்டு, அபியின் டான்ஸ் புரோகிராம் நேரில் பாரத்தேன். அப்போ என் கணவர் இதை பற்றி பெரிசா எடுத்துக்கல.

    விளக்கம்

    விளக்கம்

    இதுக்கப்புறம்தான் எனக்கு அபியுடன் நட்பு அதிகமானது. இந்த விஷயம் தெரிந்துதான் என் கணவர் என்கிட்ட சண்டை போட்டு அடிச்சார். அதனால, என் அக்கா நகை 20 பவுன் எடுத்து கொண்டு, அபியுடன் சென்றேன். ஆனால் எங்க வீட்டில் புகார் தந்து, போலீசார் என்னை தேடுகிறார்கள் என்று தெரிந்ததும், நான் சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் தந்தேன்" என்றார். இதையடுத்து போலீசார் அபியிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    English summary
    Young Girl confessed to the Devakottai Police about her Tik tok friend Abis friendship
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X