சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலக்கியாவுக்கு வந்த டிக்டாக் இம்சை.. இரவெல்லாம் ஜொள்ளு விடலாமாம்.. பணம் பறித்த பலே கும்பல்

டிக்டாக் இலக்கியா பெயரில் பணமோசடி புகார் எழுந்துளள்து

Google Oneindia Tamil News

சென்னை: "இப்படி கூடவா டிக்டாக் வீடியோ பண்ணுவாங்க" என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துபவர் இலக்கியா என்பவர்.. இவரது பெயரில் போலி ஐடி உருவாக்கப்பட்டு பணம் பறித்துள்ளது ஒரு கும்பல்.. இலக்கியாவுடன் இரவெல்லாம் ஜொள்ளு விட்டுக் கொண்டு பேசலாம் என்று நினைத்து சபலிஸ்ட்களும் பணத்தை அள்ளி வழங்கி ஏமாந்து உள்ளதாக தெரிகிறது!

Recommended Video

    கண்டக்க முண்டக்க வீடியோக்கள்.. ஜொள்ளு விட்ட டிக்டாக்கர்கள்.. பதறியடித்து வந்த இலக்கியா.. இது தேவையா?

    டிக்டாக் வேண்டவே வேண்டாம் என்று நீதிமன்றம் எவ்வளவோ சொல்லியும், வாதாடி அந்த செயலியை பெற்றனர்.. இப்போது, டிக்டாக்கில் லைக்குகளுக்காக எல்லை மீறும் வீடியோக்களை பதிவிட்டு.. அதன்மூலம் வெட்கம், மானம், உயிரை இழக்கும் விபரீதம் ஏற்பட்டு வருகிறது.. குறிப்பாக ஏகப்பட்ட பெண்கள் இதில் சிக்கி கொண்டு கதறுகிறார்கள்.

    திறமைகளை நிரூபிக்க ஆயிரம் வீடியோக்களை வெளியிடலாம்.. ஆனால், கவர்ச்சி, டவுள்மீனிங் வசனம் என்பது போய்.. ஓவர் கவர்ச்சி, ஆபாசம், நேரடி அர்த்த வசனங்களை சில பெண்கள் பேசி வீடியோ வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.. ஒரு கட்டத்தில் வாழ்க்கை சிதையும்போது, அலறி அடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனும் ஓடுகின்றனர்.

    மான பிரச்சனை

    மான பிரச்சனை

    தங்கள் மானம், குடும்பம், உயிருக்கு பிரச்சனை என்று இந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழகத்தில் மட்டும் சுமார் 38 பெண்கள் போலீசாரிடம் புகார் தந்துள்ளதாக ஒரு கணிப்பு கூறுகிறது. அந்த வகையில் டிக்டாக்கில் பிரபலமான பெண் இலக்கியா என்பவரும் ஒரு புகார் தெரிவித்துள்ளார்.. உருகவைக்கும் நடிப்பு, வியக்கத்தகுந்த திறமை என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவுமே இலக்கியா வீடியோக்களில் பெரும்பாலும் இல்லை.

    முகபாவனை

    முகபாவனை

    முழுக்க முழுக்க ஆபாசம்தான்.. உச்சக்கட்ட கவர்ச்சிதான்.. முகபாவனைகள்தான்.. இவரது கவர்ச்சிகரமான பல்வேறு வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர் கூட்டமும் உண்டு... ஆயிரக்கணக்கில் லைக்குகளும், கமெண்டுகளும் குவிகின்றன. இவர் அளித்திருக்கும் புகார் பணம் சம்பந்தப்பட்டது.. இவரது பெயரில் போலி கணக்கு தொடங்கி சிலர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    முகபாவனை

    முகபாவனை

    முழுக்க முழுக்க ஆபாசம்தான்.. உச்சக்கட்ட கவர்ச்சிதான்.. முகபாவனைகள்தான்.. இவரது கவர்ச்சிகரமான பல்வேறு வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர் கூட்டமும் உண்டு... ஆயிரக்கணக்கில் லைக்குகளும், கமெண்டுகளும் குவிகின்றன. இவர் அளித்திருக்கும் புகார் பணம் சம்பந்தப்பட்டது.. இவரது பெயரில் போலி கணக்கு தொடங்கி சிலர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    கவர்ச்சி

    கவர்ச்சி

    ஆனால் இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்றும், போலி ஐடியை உருவாக்கி யாரோ செய்யும் இந்த காரியத்தை நம்பி பணத்தை பறிகொடுக்க வேண்டாம் எனவும் இலக்கிய கேட்டு கொண்டுள்ளார். டிக்டாக்கினால் எத்தனையோ மோசடிகள் அரங்கேறிய நிலையில், இப்போது கவர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடும் பெண்களின் பெயரை பயன்படுத்தி, ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதும் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    விபரீதம்

    விபரீதம்

    சாதாரணமாக பெண்களின் போட்டோ கிடைத்தாலே அதை ஆபாசமாக சித்தரித்து சோஷியல் மீடியாவில் பதிவிடும் நிலையில், இப்படி கவர்ச்சிகரமான பாடல்களுடன் டிக்டாக் வெளியிட்டால் என்னமாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதையும் நினைக்க வேண்டி உள்ளது.. சுருக்கமாக சொன்னால், தேவையில்லாத வீடியோக்களை பதிவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளைதான் சந்திக்க வேண்டி இருக்கும்.. தன்னை டிக்டாக் சில்க் என்று நினைத்து கொண்டு ஆபாசத்தில் புரளும் எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும்!!

    English summary
    Tik tok famous actress ilakkiyas fake ID name has been defrauded
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X