சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்கிட்டயே எல்லாமே இருக்கு.. அந்த மாதிரி பொண்ணு கிடையாது நான்.. கோபம் காட்டும் இலக்கியா

டிக்டாக் இலக்கியா போலீசில் புகார் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எனக்கு தேவையானது எல்லாமே என்கிட்ட இருக்கு.. யாருகிட்டயும் பணம் வாங்கணும்னு அவசியம் இல்லை.. அந்த மாதிரி குடும்பத்துல இருந்தும் நான் வளர்ந்து வரல.. என் பேர் சொல்லி பணம் பறிச்சவங்க யார்ன்னு எனக்கு தெரியணும், அதுக்காகத்தான் போலீசில் புகார் தந்திருக்கேன்" என்று டிக்டாக் புகழ் இலக்கியா தெரிவித்துள்ளார்

Recommended Video

    கண்டக்க முண்டக்க வீடியோக்கள்.. ஜொள்ளு விட்ட டிக்டாக்கர்கள்.. பதறியடித்து வந்த இலக்கியா.. இது தேவையா?

    டிக்டாக்கில் கவர்ச்சிகரமான வீடியோக்களை பதிவிட்டு, அதன்மூலம் லட்சக்கணக்கானோரின் லைக்குகளை பெற்றவர் இலக்கியா.. இவரது பெயரில் போலி ஐடி ஒன்று உருவாக்கப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    ஒருநாள் இரவு முழுவதும் பெர்சனல் சாட்டில் விருப்பம்போல டிக்டாக் வீடியோ பதிவிடுவதாக ஆசைக்காட்டி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் என பேங்க் அக்கவுண்ட்டில் பணமும் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.. இலக்கியாவுடன் இரவெல்லாம் ஜொள்ளு விட்டுக் கொண்டு பேசலாம் என்று நினைத்து சில சபலிஸ்ட்களும் பணத்தை அள்ளி வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது!

    விளக்கம்

    விளக்கம்

    ஆனால் உண்மையிலேயே இலக்கியா அப்படி ஒரு ஐடியை உருவாக்கவே இல்லையாம்.. இதை பற்றி இலக்கியா 2 வீடியோ வெளியிட்டு விளக்கமும் அளித்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் தந்துள்ளார்.. அந்த புகாரில் அவர் சொன்னதாவது: "நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறேன். ஜாம்பி திரைப்படத்திலும் நடித்துள்ளேன்.

    நேரலை

    நேரலை

    டிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளேன். இதில் எனக்கு அதிகமான லைக்ஸ் வந்தது. அந்த மகிழ்ச்சியில் அதிகமான வீடியோக்களை வெளியிட்டேன். கடந்த 15-ம் தேதி என்னைப்பற்றி அவதூறான செய்தி வெளியிடப்பட்டது. மேலும், நான் ஆண்களிடம் நேரலையில் பேச பணம் பெற்று மோசடி செய்ததாக தகவல் வெளியானது. அதனால் நான் மிகுந்த அவமானமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மனஉளைச்சலுக்கு உள்ளாகினேன்.

    போலி ஐடி

    போலி ஐடி

    எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ ஒரு சிலர் போலியான ஐடி-க்களை உருவாக்கிப் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் இலக்கியா சொன்னதாவது: "பணம் நான் வாங்கிட்டதா சொல்லி என் மேல கம்ப்ளைண்ட் பண்ணியிருக்காங்க.. அந்தமாதிரி நான் பண்ண மாட்டேன்.

    மோசடி

    மோசடி

    எனக்கு தேவையானது எல்லாமே என்கிட்ட இருக்கு.. யாருகிட்டயும் பணம் வாங்கணும்னு அவசியம் இல்லை.. அந்த மாதிரி குடும்பத்துல இருந்தும் நான் வளர்ந்து வரல.. என்னுடைய பேரை யூஸ் பண்ணி இந்த மாதிரி நிறைய போலி ஐடி உருவாக்கி இருக்காங்க.. இன்ஸ்டாகிராம், டிக்டாக்கில் போலி ஐடி என் பேரில் இருக்கு. எனக்கு இதை யார் பண்ணினதுன்னு தெரியணும்.. இதுக்கு பின்னாடி யார் இருந்து இப்படி தப்பு பண்றாங்கன்னு எனக்கு தெரியணும்.. அதுக்காகத்தான் நான் இங்க வந்து நிக்கிறேன்" என்றார்.

    சபலிஸ்ட்கள்

    சபலிஸ்ட்கள்

    என் பேரில் 10-க்கும் மேற்பட்ட போலி ஐடி உள்ளன... இது சம்பந்தமான நடவடிக்கை போலீஸ் தரப்பில் எடுக்கப்படும் என்றே தெரிகிறது... இலக்கியா பெயரை சொல்லி பணத்தை கறந்தவர்கள் யார் என தெரியவில்லை... அதேபோல, இலக்கியாவுடன் இரவெல்லாம் ஜொள்ளு விட்டுக் கொண்டு பேசலாம் என்று நினைத்து பணத்தை இழந்த சபலிஸ்ட்களும் யார் என தெரியவில்லை!!

    English summary
    Tik tok ilakkiya complaint to police commissioner office and gives explanation about money cheating
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X