சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கூப்பிட்டாங்க.. போனேன்.. ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க".. கதறி கதறி அழும் "டிக்டாக்" ஜிபி முத்து!

டிக்டாக் புகழ் ஜிபி முத்து மீது சர்ச்சை புகார் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "டிக்டாக் நண்பர்களே" என்று உற்சாகத்துடன் பேசும் ஜிபி முத்து கண்ணீருடன் ஒரு வீடியோ போட்டுள்ளார்.. 'போலீஸ் கூப்பிட்டாங்க.. போனேன்.. 3 நாளா சாப்பிடல.. ஆனால் ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க" என்று கூறுகிறார். ஜிபி முத்து அழுவதற்கு என்ன காரணம்?
டிக்டாக் என்றாலே ஜிபி முத்து ரொம்ப ஃபேமஸ்.. ரொம்ப இயல்பாக எதார்த்தமாக இவர் பேசும் நெல்லை பாஷைக்கும் வார்த்தைக்கும் ரசிகர்கள் அதிகம்..

டிக்டாக் நண்பர்களே என்று கூப்பிடும்போதே ரசிகர்கள் அந்த வார்த்தையில் விழுந்துவிடுவார்கள்.. இவர்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர்.. இவரது வீட்டை ஒட்டியே ஒரு மரக்கடையை வைத்து நடத்தி வருகிறார்.

tiktok gp muthu: thoothukudi police complaint against gp muthu

இவரது பெரும்பாலான வீடியோக்கள் மரக்கடையில்தான் எடுத்திருப்பார்.. சுருக்கமாக சொல்ல போனால், மரக்கடை பிசினஸ் பார்ட் டைம்தான்.. இந்த டிக்டாக் தான் ஃபுல்டைம் வேலையாக இருக்கும். இவருடன் ரவுடி பேபி சூர்யாவும் இணைந்து டிக்டாக்கில் டூயட் பாடுவது பிரபலம்.. அதுமட்டுமல்ல, இவர்களை பற்றிய விவாதம் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது.

2 பேருக்கும் எவ்வளவு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவுக்கு கழுவி கழுவி ஊத்தும் பட்டாளமும் உண்டு.. ஏகப்பட்ட திட்டுகளை 2 பேரும் வாங்கி உள்ளனர்.. புகார்களும் சென்றுள்ளன... எத்தனை முறை ஐடியை பிளாக் செய்தாலும் ஜிபி முத்து புது ஐடியை ஆரம்பித்து அதில் கெத்து காட்ட ஆரம்பித்துவிடுவார்.

இந்த சமயத்தில்தான் இவர் மீது ஒரு புது சர்ச்சை எழுந்துள்ளது.. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறு செய்வதுபோல் வீடியோ வெளியிட்டுள்ளாராம்.. இந்த வீடியோ குறித்து வனவேங்கைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உலகநாதன் ஜிபி முத்துவுக்கு எதிராக தூத்துக்குடி போலீசில் புகார் அளித்தார். அதேபோல, பல மாவட்டங்களிலும் இக்கட்சியினர் புகார் தந்தனர்.. இதனால் டென்ஷன் ஆன ஜிபி முத்து புகார் அளிப்பவர்களுக்கு எதிராக திட்டி, திரும்பவும் டிக்டாக் வீடியோ பதிவிட்டார்.

இந்த விவகாரமே அடங்காத நிலையில் இன்னொரு பிரச்சனை வந்துவிட்டது.. இவருடைய மகள் கோபித்து கொண்டுள்ளார்.. அது குறித்து வெளியிட்ட வீடியோதான் விஸ்வரூபமெடுத்தது.. இதை பார்த்ததும் உலகநாதன் திரும்பவும் புகார் அளித்தார்.. ஆனால் இந்த முறை முதலமைச்சரின் தனிப்பிரிவில் இந்த புகாரை அளித்தார். உடனடியாக ஜிபி முத்து மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு, தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது... இதையடுத்து, உடன்குடியில் வீட்டில் ஹாயாக இருந்த ஜிபி முத்துவை குலசேகரபட்டினம் போலீசார் அள்ளிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

எதற்காக ஒரு சமுதாயத்தை அவமானப்படுத்தி வீடியோ போட்டார் அல்லது ஜாலியாக வீடியோவை பதிவிட்டாரா? என்ற கோணங்களில் விசாரணை நடந்தது. அப்போது "யதார்த்தமா பேசிட்டேன், இனிமல் அப்படி பேச மாட்டேன்.. முக்கியமா குழந்தைங்களை வைத்து கொண்டு அப்படி பேச மாட்டேன்" என்று கதறியுள்ளதாக தெரிகிறது.

சீனாவை தண்டிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து.. உய்குர் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்காக அதிரடிசீனாவை தண்டிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து.. உய்குர் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்காக அதிரடி

Recommended Video

    தனி அறை கொடுத்தால் தான் வருவேன்... அடம் பிடித்த ரவுடி பேபி

    பிறகு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்கவும், எச்சரித்து இவரை அனுப்பியுள்ளனர் போலீசார்.. அநேகமாக இவர் பாத்ரூமிலும் வழுக்கி விழுந்திருப்பார் போல.. ஏனென்றால் திடீரென ஒரு வீடியோ போட்டுள்ளார்.. அதில் முகமெல்லாம் வீங்கி போய், அழுதுகொண்டே பேசுகிறார்.. "'போலீஸ் கூப்பிட்டாங்க.. போனேன்.. 3 நாளா சாப்பிடல.. காவல்துறை நல்லவங்க.. எல்லாரும் சாப்பிடுங்க.. சாப்பிடுங்கன்னு கெஞ்சினாங்க.. ரொம்ப நல்லவங்க அவங்க... ஆனால் என்னை போட்டு ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க"என்று அழுகிறார்! இதெல்லாம் தேவையா முத்து?!

    English summary
    tiktok gp muthu: thoothukudi police complaint against gp muthu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X