சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ஆயுள் காலம் மேலும் நீட்டிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஏராளமானோர் கூறியதை அடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவருக்காக எழிலகத்தில் ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் செப்டம்பர் 25-ஆம் தேதி,2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

Time extension for Arumugasamy commission

இந்த அலுவலகத்தில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயலலிதா வீட்டு அலுவலர்கள், சசிகலா குடும்பத்தினர், கார் ஓட்டுநர், ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர்கள் என ஏராளமானோர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஆறமுகசாமி ஆணையம் தனது பதவிக்காலத்தை மேலும் நீட்டித்தது.

பீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசியா?.. அப்ப மற்ற மாநிலங்களெல்லாம் பாகிஸ்தானா.. சிவசேனா கேள்வி பீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசியா?.. அப்ப மற்ற மாநிலங்களெல்லாம் பாகிஸ்தானா.. சிவசேனா கேள்வி

இப்படியே 8 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 9ஆவது முறையாக பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு தடை விதித்ததால் கடந்த 21 மாதங்களாக விசாரணை நடைபெறாமலேயே கால நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

English summary
Time extension for Arumugasamy commission for 9th time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X